மாவோயிஸ்ட் தாக்குதல்: 16 வீரர்கள் வீரமரணம்

மாவோயிஸ்ட் தாக்குதல்: 16 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தை பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்து தாக்குதல் நடத்தியதை போன்று மகாராஷ்டிராவில் கமாண்டோக்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில், 16 கமாண்டோ படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு வீசி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வாகன டிரைவரும் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. முன்னதாக நேற்று பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு தீவைத்து மாவோயிஸ்டுகள்…

Read More

இலங்கையில் கடல் வழியாக மற்றொரு தாக்குதல்? இந்திய உளவுத்துறை ரகசிய தகவல்

இலங்கையில் கடல் வழியாக மற்றொரு தாக்குதல்? இந்திய உளவுத்துறை ரகசிய தகவல்

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 9 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்கள். இதில் 40 வெளிநாட்டினர் உள்பட 253 பேர் கொல்லப்பட்டனர். 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். அவர்கள் உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு இலங்கை அரசு தடை விதித்தது. இலங்கையில், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும், அதனால் கடற்கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என…

Read More

நீங்கள் பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வருகிறதே…!!

நீங்கள் பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வருகிறதே…!!

‘நீங்கள், பா.ஜ.,வில் சேரப் போகிறீர்களா’ என, நிருபர்கள் கேட்டதால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் கோபம் அடைந்தார். மதுரையில் அவர் கூறியதாவது:நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள, மூன்று, எம்.எல்.ஏ.,க்களும், அ.ம.மு.க.,வில் இருப்பதற்கான ஆவணங்கள், சபாநாயகரிடம் உள்ளன. தற்போது, அ.தி.மு.க.,வில், ‘சீட்’ கேட்டு, கிடைக்காதவர்களுக்கு அடுத்த வாய்ப்பு வழங்கப்படும். உள்ளாட்சி தேர்தலும், விரைவில் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அவரிடம், ‘நீங்கள், பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வருகிறதே’ என, நிருபர்கள் கேட்டதற்கு, ‘இந்த கேள்வி அடிமுட்டாள்தனமானது. ஸ்டாலினிடம், காங்கிரசில் சேரப் போகிறீர்களா என கேட்க முடியுமா?’ என, கோபமாக கேட்டார். முன்னதாக ”துணை முதல்வர் பன்னீர்செல்வம் மே., 23க்கு பின் பா.ஜ.,வில் இணைவது உறுதி” என அ.ம.மு.க., கொள்ளை பரப்பு செயலர் தங்க…

Read More

பொய் சொன்ன ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்

பொய் சொன்ன ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்

பொய் சொன்ன ராகுலை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ராகுல் சொன்ன தவறான பேச்சுக்கு சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., எம்.பி., மீனாட்சி லெக்வி அவதூறு வழக்கு தொடர்ந்தார். ரபேல் வழக்கில் கூடுதல் ஆவணங்களை ஏற்று விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து ராகுல் சுப்ரீம்கோர்ட்டே, காவலாளி மோடி திருடன் என்று சொல்லி விட்டது என கருத்து தெரிவித்தார். இதனையடுத்து பா.ஜ., தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில்; உணர்ச்சிப்பூர்வமாக தவறுதலாக கூறி விட்டதாகவும், இதற்கு வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த…

Read More

மம்தாவின் 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் சேருவர் : மோடி

மம்தாவின் 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் சேருவர் : மோடி

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் மே 23 தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பா.ஜ.,வில் இணையப்போகின்றனர் என பிரதமர் மோடி அதிரடியாக பேசினார். மே.வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜியின் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள, ஸ்ரீராம்பூர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், ” மேற்கு வங்கத்தில் மம்தாவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய விரும்புகின்றனர். நாடுமுழுவதும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் எல்லா பக்கமும் தாமரை மலர்ந்திருக்கும், இங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்….

Read More

இலங்கைக்கு செல்ல கறுப்பு பூனை படை தயார்

இலங்கைக்கு செல்ல கறுப்பு பூனை படை தயார்

பயங்கரவாதிகளை எதிர்கொள்வது குண்டுவெடிப்பு நேரங்களில் கையாள்வதில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களும் என்.எஸ்.ஜி., , எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர் ( கறுப்பு பூனை படை ) சென்னையில் தயார் நிலையில் உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக 253 பேர் கொல்லப்பட்டனர். இன்னும் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இலங்கையில் கடந்த 21 ம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 253 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து இலங்கை படையினர் பயங்கரவாதிகளை கைது செய்வதில் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கிழக்கு இலங்கையின் கல்முனை பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது…

Read More

வாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு

வாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று ( 25 ம் தேதி ) மெகா பேரணி நடந்தது. நாளை (26 ம் தேதி ) வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை வாரணாசி வந்தார். தொடர்ந்து ஆதரவாளர்களுடன் மோடி 6 கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்றார். 5 லட்ச தீபம் 2வது முறை போட்டியிடும் பிரதமர் வருகையை முன்னிட்டு இங்குள்ள கோயில்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் அலங்கார சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 5 லட்சம் தீபம் ஏற்றப்பட்டது.பனராஸ் இந்து பல்கலை., வளாகம் லங்கா கேட் அருகே இருந்து பேரணி துவங்கியது. பேரணியில் பா.ஜ.,…

Read More

தாயை பிரிந்தது ஏன்? மோடி விளக்கம்

தாயை பிரிந்தது ஏன்? மோடி விளக்கம்

பிரதமர் மோடி, தான் தனது தாயுடன் வசிக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகர் அக்சய் குமாருக்கு கலந்துரையாடல் வடிவில் அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்றுபட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மோடி, தனது தாய் குறித்தும், தான் தனது தாயுடன் வசிக்காததற்கான காரணம் குறித்தும் தெரிவித்துள்ளார். அதில் அவர், மிக இளம் வயதிலேயே நான் என் தாயை பிரிந்து வந்து விட்டேன். சிறு வயதிலேயே அனைத்து பற்றுகளில் இருந்தும் விடுபட்டேன். அனைத்து பந்தங்களும் மாயை என்பது தான் நான் எனது பயிற்சியில் கற்றுக் கொண்டது. அதனை அனைத்து பந்தங்களில் இருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன். அந்த வயதில் நான் வீட்டை விட்டு வெளியேறிய போது துன்பமாக…

Read More

ரபேல் விவகாரம்: பொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு

ரபேல் விவகாரம்: பொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு

ரபேல் விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாம் என கோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. ‘ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யும் நடைமுறையில், எந்த மோசடியும் நடந்ததற்கான சந்தேகம் எழவில்லை’ என, முதலில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ‘திருடப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் எந்த முடிவையும் நீதிமன்றம் எடுக்கக் கூடாது’ என மத்திய அரசு வாதிட்டது….

Read More

வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்

வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இதற்காக தூத்துக்குடியில் அவர் தங்கியிருந்த வீட்டில் கடந்த 16-ந்தேதி, உள்ளூர் போலீசார் மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழுவினருடன் இணைந்து வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது ஒரு ஜனநாயக படுகொலை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதைப்போல பல்வேறு கட்சித்தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை என தேர்தல் கமிஷன் நேற்று விளக்கம் அளித்து உள்ளது. இது வெறும் ஒரு சரிபார்த்தல்…

Read More
1 3 4 5 6 7 90