கவலைப்படாதே மகனே: சோனியா அட்வைஸ்

கவலைப்படாதே மகனே: சோனியா அட்வைஸ்

ஓட்டு எண்ணிக்கைக்குப் பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க நேர்ந்து, பிரதமர் பதவி காங்கிரசிற்கு கிடைக்காவிட்டால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று மகன் ராகுலிடம் சோனியா கூறி உள்ளதாக தெரிகிறது. பா.ஜ.,வுக்கு 200 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று சோனியா நினைக்கிறார். அவருக்கு நெருக்கமான காங்., மூத்த தலைவர்களான அகமது படேல், சாம் பிட்ரோடா, ம.பி., முதல்வர் கமல்நாத் போன்றோர் கூறிய தகவல்களின் அடிப்படையிலேயே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.இந்த தலைவர்களிடம் பேசும்போது, பா.ஜ., அல்லாத அரசு அமைய நேரிடும் வாய்ப்பு உள்ளதால், திரிணாமுல் காங்., தலைவர் மம்தா, பகுஜன் தலைவர் மாயாவதி ஆகியோருடன் நட்புடன் இருக்குமாறும் சோனியா யோசனை தெரிவித்துள்ளார். பா.ஜ.,…

Read More

கமலை நடமாட விடமாட்டோம்: ஜீயர் ஆவேசம்

கமலை நடமாட விடமாட்டோம்: ஜீயர் ஆவேசம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் செண்டலங்கார ஜீயர் கூறியதாவது: கலாசாரம் தெரியாதவர்களை கோவில் நிர்வாக அதிகாரிகளாக நியமனம் செய்வதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் பத்மநாப சாமி, திருப்பதி கோவில் நகைகள் குறித்த விபரம் வெளியிட்டது போல் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் நகைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும். ஹிந்துக்களுக்கு விரோதமாக கருத்துக்களை வெளியிட்டுள்ள கமலஹாசனை எங்கும் நடமாட விட மாட்டோம். கமலஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாரோ என தோன்றுகிறது. அவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசி வருகிறார். காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றதில் தவறு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read More

பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்த மணிசங்கர் அய்யர்

பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்த மணிசங்கர் அய்யர்

காங்., கட்சியின் மூத்த தலைவரான, மணிசங்கர் அய்யர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இழிவானவர் என்று பொருள்படும், ‘நீச்’ என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, 2017 டிசம்பரில், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின், அமைதியாக இருந்த மணிசங்கர் அய்யர், ‘ரைசிங் காஷ்மீர்’ மற்றும் ‘த பிரின்ட்’ ஆகிய ஆங்கில நாளிதழ்களில், ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பிரதமர் மோடி குறித்து விமர்சித்து, அவர் எழுதியுள்ள இந்தக் கட்டுரை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மோசமான விமர்சனங்களை முன்வைத்து, தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவரது வாயில் இருந்து,…

Read More

பயங்கரவாதத்தை அழிப்பதும் துாய்மை பணி தான்: பிரதமர் மோடி

பயங்கரவாதத்தை அழிப்பதும் துாய்மை பணி தான்: பிரதமர் மோடி

உ.பி., மாநிலம், குஷி நகர், தியோரியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, அவர் திறமையான, நேர்மையான அரசுக்கு ஓட்டளிக்க, மக்கள் முடிவு செய்து விட்டனர். அதனால், இப்போது எதிர்க்கட்சிகள் மல்லாக்க கவிழ்ந்து விட்டன.உ.பி.,யில், அகிலேஷ் மற்றும் மாயாவதி முதல்வராக பதவி வகுத்த காலத்தை விட, குஜராத்மாநிலத்தில், நான் அதிக காலம் முதல்வராக இருந்துள்ளேன்; மக்கள்,பிரதமர் பதவியையும் அளித்தனர்.ஆனால், அந்த பதவியையோ, அதிகாரத்தையோ, என் குடும்பத்துக்காக எப்போதுமே பயன்படுத்தியது இல்லை. ஏழ்மையில் இருந்த என் குடும்பம், பணக்காரர்களாக மாறவும் இல்லை. மக்கள் அளித்த அதிகாரத்தை, அவர்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் மட்டுமே பயன்படுத்தினேன். இதுவரை நான், ஜாதி அரசியலில் ஈடுபட்டது கிடையாது; ஆனால்,…

Read More

ஒரு வருட சம்பளத்தை கொடுக்கிறார் நவீன்பட்நாயக்

ஒரு வருட சம்பளத்தை கொடுக்கிறார் நவீன்பட்நாயக்

போனி புயலால் பாதிப்புக்குள்ளான ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் ஒரு வருட சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளார். சமீபத்திய புயலால் ஒடிசா பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு கட்டடங்கள் பல சேதமுற்றுள்ளன. பெட்ரோல் பம்ப், ஏடிஎம் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். 5 ஆயிரத்து 791 பள்ளிகள் சேதம். புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஒடிசாவுக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால் மாநில அரசு சார்பில் 17 ஆயிரம் கோடி கேட்கப்பட்டது. மாநில அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள…

Read More

மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் இறுதியில் ஊழல்வாதி எனப் பெயரெடுத்தார்

மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் இறுதியில் ஊழல்வாதி எனப் பெயரெடுத்தார்

துரியோதனின் அழிவுக்கு அவனது ஆணவமே காரணம் என முன்னாள் பிரதமர் ராஜீவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு, பிரியங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், பிரசாரம் ஒன்றில், பிரதமர் மோடி பேசுகையில், மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் இறுதியில் ஊழல்வாதி எனப் பெயரெடுத்தார் என பேசியிருந்தார். இதற்கு காங்., மற்றும் பிற கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் நடந்த பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: பிரதமர் மோடிக்கு வேறு…

Read More

பாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வம்

பாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வம்

வரும், 19ல் தேர்தலை சந்திக்கும், பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் லோக்சபா தொகுதியின், பா.ஜ., வேட்பாளர், பாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவரால் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியவில்லை. காரணம், வட மாநிலங்கள் பலவற்றிற்கும், பா.ஜ.,வின் நட்சத்திர பேச்சாளராக அவர், சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதனால், தொகுதிக்கு, வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் தான் அவரால் வர முடிகிறது. இந்த லோக்சபா தொகுதியின், ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்குள் அடங்கியுள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல், மேலோட்டமாக, நகர்புறங்களில் மட்டும் பிரசாரம் செய்கிறார்.ஆனால், காங்கிரஸ் வேட்பாளர், சுனில் ஜாக்கர், இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரசாரத்தை துவக்கி, இரண்டு முறை, அனைத்து இடங்களுக்கும் சுற்றி வந்து…

Read More

எங்கள் ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்ற காங்கிரசை கலாய்த்த பிரதமர் மோடி

எங்கள் ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்ற காங்கிரசை கலாய்த்த பிரதமர் மோடி

இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது எல்லாம் என்னுடைய அரசு எல்லைத் தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறது என பிரதமர் மோடி கூறி வருகிறார். காங்கிரஸ்  ஆட்சியின்போது ராணுவத்திற்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு கால இடைவெளிகளில் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது, எங்களைப் பொறுத்தவரையில் ராணுவ நடவடிக்கை என்பது ஒரு வியூக நடவடிக்கையாக இருந்தது. இந்தியாவிற்கு எதிரான படைகளுக்கு எதிராகவே மேற்கொண்டோம், ஆனால் அதனை வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தவில்லை எனக் கூறினார். இந்நிலையில் எங்கள் ஆட்சியின்போது 6 சர்ஜிக்கல்…

Read More

காலை 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவு: சுப்ரீம் கோர்ட் யோசனை

காலை 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவு: சுப்ரீம் கோர்ட் யோசனை

வெயில் காரணமாக லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் யோசனை உள்ளது. வெயில் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், ரம்ஜான் மாதம் துவங்குவதால் ஓட்டுப்பதிவை முன்கூட்டியே துவங்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே. வெயில் காரணமாக பிற்பகலுக்கு பிறகு ஓட்டளிக்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ரம்ஜான் மாதமும் துவங்கி உள்ளதால் காலை 7 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவை துவங்கலாமே என தெரிவித்துள்ளது….

Read More

வாரணாசியில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு

வாரணாசியில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற மே 19ந்தேதி நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் தேஜ் பகதூர் யாதவ் என்பவரை சமாஜ்வாடி கட்சி களமிறக்கி உள்ளது. இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர். வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அவர் புகார் எழுப்பினார். தரமற்ற முறையில் உணவு பரிமாறப்படுவதால் இரவில் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்ற குற்றச்சாட்டுடன் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

Read More
1 2 3 4 5 6 90