இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்த வேண்டும்

இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்த வேண்டும்

இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான முறையான கோரிக்கையை மலேசிய அரசுக்கு பிரதமர் மோடியின் அரசு அனுப்பி வைத்தது. மும்பையைச் சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக் 53. வங்கதேச தலைநகர் டாக்காவில் 2016-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவன், தாம் ஜாகீர் நாயக்கின், பேச்சில் கவரப்பட்டு தாக்குதல் நடத்தியதாக கூறியதையடுத்து, ஜாகீர் நாயக்கை கைது செய்து விசாரணை நடத்துமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து ஜாமீர் நாயக் மீது பயங்கரவாத செயல்களில் ஈடுபட துாண்டியது மற்றும் கறுப்பு பண மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2016 -ம் ஆண்டு…

Read More

இந்தியா மானேசரோவர் யாத்திரைக்கான சாலைப்பணியை துவைக்கியது

இந்தியா மானேசரோவர் யாத்திரைக்கான சாலைப்பணியை துவைக்கியது

கைலாஷ் மானேசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக தங்கள் நாட்டு எல்லையில் சாலைப்பணி மேற்கொண்ட இந்தியாவிற்கு நேபாளம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியா சீனா எல்லைப்பகுதியான உத்தர்கண்ட் மாநிலம் தர்ச்சூலா என்ற பகுதியிலிருந்து கைலாஷ் மானேசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக 80 கி.மீ. தொலைவிற்கு சாலைப்பணியை இந்திய அரசு கடந்த வெள்ளியன்று துவக்கியுள்ளது. இப்பணிகள் நேபாளம் நாட்டின் லைப்பூலோக் கணவாய் வழியாக சாலை போடப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், நேபாளத்திற்கு சொந்தமான பகுதிகளில் சாலைப்பணிகள் மேற்கொண்டு வருவதற்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவிற்கான நேபாளம் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது. நேபாளம் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டுவிட்டரில் வெளியிட்டிருப்பதாவது: இந்தியாவின் இந்த…

Read More

நீதியின் சக்கரம் நிற்காமல், நிச்சயம் சுழன்றே தீரும் – ஸ்டாலின்

நீதியின் சக்கரம் நிற்காமல், நிச்சயம் சுழன்றே தீரும் – ஸ்டாலின்

‘நீதியின் சக்கரம் நிற்காமல், நிச்சயம் சுழன்றே தீரும். அப்போது, ஊரடங்கு நேர ஊழல்களும், கொரோனா கால கொள்ளைகளும், டெண்டர் முறைகேடுகளும், மக்கள் மன்றத்திற்கு வந்தே தீரும்’ என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், கூறியுள்ளார். அவரது அறிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘கான்ட்ராக்டர்’ துரை ஜெயகுமார், பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், கூறப்பட்டுள்ள முறைகேடுகள், நெடுஞ்சாலை துறை முறைகேட்டை அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளன. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை உப கோட்டங்களில், 462.11 கி.மீ., நீள சாலைகளை, ஐந்து ஆண்டு பராமரிக்க, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பீதியில் உறைந்து, வீட்டிற்குள் முடங்கி கிடந்த நேரத்தில், ஏப்., 15ல், ‘ஆன்லைன் டெண்டர்’ தாக்கல் செய்ய கடைசி…

Read More

கொரோனா வைரஸ் பரவ காரணமாக, தப்லிக் – இ – ஜமாத் அமைப்பினரே காரணம் – யோகி ஆதித்யநாத்

கொரோனா வைரஸ் பரவ காரணமாக, தப்லிக் – இ – ஜமாத் அமைப்பினரே காரணம் – யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்திலும் இதர பகுதி களிலும், கொரோனா வைரஸ் பரவ காரணமாக, தப்லிக் – இ – ஜமாத் அமைப்பினர் விளங்குகின்றனர். ஒரு நோயால் நாம் பாதிக்கப்படுவது குற்றமல்ல; ஆனால், தங்களுக்கு நோய் இருப்பதை மறைப்பது, மிகப்பெரிய குற்றம். இது கண்டனத்திற்குஉரியது. இந்த குற்றத்திற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். – யோகி ஆதித்யநாத் , உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ., ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்! கொரோனா வைரசால் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நம் உறவினர் மற்றும் நண்பர்களை இழந்து தவிக்கிறோம். பொருளாதார சீர்குலைவு, அரசுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து நாம் மீண்டு வர, மக்கள் ஒன்றிணைந்து இந்த…

Read More

ஐ.நா.வின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் – வாழ்த்துக்கள்

ஐ.நா.வின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் – வாழ்த்துக்கள்

தமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது இவர் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில்ஓய்வு பெற உள்ளதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். ஜெனிவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, மலேசியா, நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உயர் பதவி மற்றும் ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக பணிதுறையின் இணை செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு பிப்.,5 ம் தேதி முதல் வெளியுறவுத்துறையின் பொருளாதார பிரிவில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

Read More

நடிகை ஜோதிகாவின் பேச்சு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்

நடிகை ஜோதிகாவின் பேச்சு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்

நடிகை ஜோதிகா, சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசும்போது, ”தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கு செல்ல வேண்டும் என்றார்கள். நான் ஏற்கனவே பார்த்துள்ளேன் என்றேன். மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அந்த மருத்துவமனையை பார்த்துவிட்டு இந்த கோவிலுக்கு செல்ல மனம் வரவில்லை. கோவிலில் காசு போடாதீர்கள். கோவில்களை பராமரிப்பது போன்று மருத்துவமனை, பள்ளிக்கூடங்களை பராமரியுங்கள் என்றார். ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு ஹிந்து மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கோவில், மருத்துவமனைகளை பராமரிக்க வேண்டும் அதில் எந்த மாற்ற கருத்தும் இல்லை. அதற்கு எதற்கு இந்து கோவில்களை சொல்ல வேண்டும். ஏன் மற்ற மத…

Read More

வீட்டில் பணிபுரிந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து தானே இறுதிச்சடங்கு செய்தார் கவுதம் கம்பீர் !!

வீட்டில் பணிபுரிந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து தானே இறுதிச்சடங்கு செய்தார் கவுதம் கம்பீர் !!

தன் வீட்டில் பணிபுரிந்த பெண் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து அப்பெண்ணின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ., எம்.பி.,யுமான கவுதம் கம்பீர் தானே இறுதிச்சடங்கு செய்து அப்பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்தார். கவுதம் கம்பீரின் மனிதநேயம் மிக்க செயலுக்கு டிவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கவுதம் கம்பீர் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தவர் சரஸ்வதி பத்ரா (49) இவர் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரை சேர்ந்தவர். திருமணமான பின்பு இரு ஆண்டுகளில் கணவனால் கைவிடப்பட்ட அப்பெண் கவுதம் கம்பீர் நண்பர் ஒருவர் மூலமா கம்பீர் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார். சரஸ்வதி…

Read More

நரேந்திர மோதிக்கு டிரம்ப், பிரேசில் அதிபர் நன்றி – கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தடை நீக்கம்

நரேந்திர மோதிக்கு டிரம்ப், பிரேசில் அதிபர் நன்றி – கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தடை நீக்கம்

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மீதான தடையை விலக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இந்தியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதற்கு இதுவரை மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு வகை மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்தலாம் என்று கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடாக விளங்கி வரும் அமெரிக்கா இந்த வகை மருந்துகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கு திட்டமிட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு…

Read More

ஏப்.,5 இரவில் மின்விளக்கை ‘ஆப்’ செய்து அகல்விளக்கு ஏற்றுவோம் !!

ஏப்.,5 இரவில் மின்விளக்கை ‘ஆப்’ செய்து அகல்விளக்கு ஏற்றுவோம் !!

ப்., 5 ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு தீப விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வீடியோ மூலம் பேசியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மதித்து நடப்பவர்களுக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறேன். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியாவின் ஊரடங்கு உலகிற்கு முன்னுதாரணமாக திகழந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக…

Read More

துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் ஒளிபரபப்படும் !!

துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் ஒளிபரபப்படும் !!

மக்களின் கோரிக்கையை ஏற்று, 1980களில் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி தொடரான ராமாயணம் மீண்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1987 – 1988ம் ஆண்டுகளில் ஞாயிறு காலை தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பாயின. அந்த காலகட்டத்தில், இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்த தொடர் ஒளிபரப்பாகும்நாட்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படும். சில வீடுகளில் மட்டுமே அப்போது டிவி இருந்ததால், அங்கு கூட்டம் நிரம்பி வழியும். 55 நாடுகளில் 65 கோடி பேர் அந்த நேரத்தில் அந்த தொடர்களை பார்த்தனர். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

Read More
1 2 3 4 5 110