சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதை கர்நாடக அரசு எதிர்க்கும்.. ஆச்சார்யா அதிரடி

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதை கர்நாடக அரசு எதிர்க்கும்.. ஆச்சார்யா அதிரடி

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றினால் கர்நாடக அரச சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்வேம் என அம்மாநில வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். பெங்களூரூ: சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதால் ஜாமீன் என்ற பேச்சுக்கே இடமில்லை கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற உத்தரவிட்டால் கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்ல மனுத்தாக்கல் செய்வோம் என்றும் ஆச்சார்யா கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அப்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய 4…

Read More

தொலைநோக்கு பார்வை அவசியம்: அமெரிக்காவுக்கு மோடி வலியுறுத்தல்

தொலைநோக்கு பார்வை அவசியம்: அமெரிக்காவுக்கு மோடி வலியுறுத்தல்

புதுதில்லி: சீரான மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் அமெரிக்கா செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்றாக, தேர்தல் பிரசாரத்தின் போது தான் அறிவித்த அறிவிப்புகளில் ஒன்றான எச்1பி விசா பெறுவதற்கான விதிமுறைகளில் சீர்திருத்தத்தை டிரம்ப் மேற்கொண்டார். அதன்படி, எச்1பி விசா சீர்திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் பணிபுரிய வரும் பணியாளர்கள் எச்-1பி விசா பெற வேண்டுமானால், அந்த ஊழியருக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 1,30,000 டாலருக்கு மேல் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி இந்த ஊதியம் 60,000…

Read More

பெங்களூரு சிறையில் சுதாகரனுக்கு சலுகை மறுப்பு – சசி, இளவரசிக்கு மட்டுமே சலுகைகள்

பெங்களூரு சிறையில் சுதாகரனுக்கு சலுகை மறுப்பு – சசி, இளவரசிக்கு மட்டுமே சலுகைகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சுதாகரனுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சசிகலாவிற்கும், இளவரசிக்கும் மட்டும் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் இணைந்து கூட்டு சதி செய்ததாக கூறி சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை, தலா ரூ. 10 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசி, சசிகலாவிற்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சுதாகரனுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிறைக்கு வரும் முன்பே சசிகலா சில சலுகைகளை கேட்டிருந்தார். ஒரு உதவியாளர், ஏசி தனி அறை, சுடுதண்ணீர் வசதி, வீட்டு…

Read More

தி.மு.க தொடர் அமளி சட்டசபை 2 வது முறையாக 3 மணி வரை ஒத்தி வைப்பு

தி.மு.க தொடர் அமளி சட்டசபை 2 வது முறையாக 3 மணி வரை ஒத்தி வைப்பு

தி.முக உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்து சபாநாயகர் மீண்டும் சட்டபேரவையை 3 மணி வரை ஒத்திவைத்தார். கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது. தொடங்கியது சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டசபை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். திமுக, ஓ. பன்னீர்ச் செல்வம் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எடப்பாடி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது.சட்டசபையில் ஓபிஎஸ் அணியினர், எதிர்க்கட்சிகள் ரகசிய ஒட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்திற்கு வழி…

Read More

கூவத்தூர் தனியார் விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தனியாக பிரிப்பு? – தம்பிதுரை சமாதான பேச்சு

கூவத்தூர் தனியார் விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தனியாக பிரிப்பு? – தம்பிதுரை சமாதான பேச்சு

தமிழக முதல்வராக பதவியேற் றுள்ள எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளதால், கூவத்தூர் விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக் களை, தனியாக பிரித்து அவர் களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்களிடம் ஆதரவு பெறுவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் கடந்த 8-ம் தேதி இரவு முதல் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களால் கூவத்தூர் விடுதி தினமும் பரபரப்பாக இருந்து வருகிறது….

Read More

சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுக எம்பி. மைத்ரேயனின் புகார்கள் தொடர்பாக பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் மறைவுக்குப் பின், டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானார். டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். ஜெயலலிதா காலமான அன்றே முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், பிப்ரவரி 5-ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வராகும் முயற்சியை எடுத்தார். இந்நிலையில், பிப்ரவரி 7-ம் தேதி அதிமுக தலைமையை ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்தார். அடுத்தநாள் அதிமுக பொரு ளாளர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அப்போதே, பொருளாளர் பொறுப்பில்…

Read More

பராமரிப்பு பணி காரணமாக கூவத்தூர் சொகுசு விடுதி மூடுவதாக நிர்வாகம் அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக கூவத்தூர் சொகுசு விடுதி மூடுவதாக நிர்வாகம் அறிவிப்பு

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு இருந்த கூவத்தூர் சொகுசு விடுதி பராமரிப்பு பணி காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில்  11 நாட்களாக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தங்கவக்கப்பட்டு இருந்தனர். இதனால் தமிழகம் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இந்த பகுதியும் இந்த விடுதியும் பிரபலமானது. இன்று சட்டசபையில்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கபட்டது. இதை தொடர்ந்து அங்கு தங்கவைக்கப்பட்டு உள்ள  எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டசபைக்கு அழைத்து கொண்டுவரப்பட்டனர். இந்த நிலையில்  கூவத்தூர் விடுதி சார்பில் வெளியே ஒரு நோட்டீஸ் ஒட்டபட்டு உள்ள்து. அதில் பராமரிப்பு பணிகாரணமாக விடுதி மூடப்படுவதாக கூறப்பட்டு…

Read More

கோவையில் ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலை : 24-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

கோவையில் ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலை : 24-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 112 அடி உயர ஆதியோகி சிவனின் திருமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ம் தேதி திறந்துவைக்கிறார். இது தொடர்பாக ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மனித குலத்துக்கு ஆதியோகி யின் இணையற்ற பங்களிப்பை அங்கீ கரிக்கும் வகையில், உலகிலேயே மிகப் பெரிய திருமுகமாக இது உருவாக் கப்பட்டுள்ளது. யோக விஞ்ஞானத்தில் உள்ள 112 வழிமுறைகளை அங்கீ கரிக்கும் வகையிலும் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருமுகத்தை திறந்து வைப்பதுடன், உலகெங்கும் நடைபெற உள்ள மகா யோக வேள்வியை பிரதமர் புனித தீமூட்டி தொடங்கிவைக் கிறார். மகா யோக…

Read More

சட்டமன்றத்தில் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல்

சட்டமன்றத்தில் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல்

சட்டமன்றத்தில் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம், கடலூர், கரூரில் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கரூர்,கடலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.  சென்னையில் காசிமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம், நாகை, ஈரோடு, மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். தாம்பரம்–குரோம்பேட்டை சாலையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பல பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

Read More

சசிகலா 4 ஆண்டுகளுக்கு முன்பே சிறையில் இருந்து விடுதலை ஆக வாய்ப்பு?

சசிகலா 4 ஆண்டுகளுக்கு முன்பே சிறையில் இருந்து விடுதலை ஆக வாய்ப்பு?

அதிமுக பொதுச் செயலர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும், சிறையில் 4 ஆண்டுகள் முழுவதுமாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கு முன்பாகவே இவர்கள் விடுதலை ஆக ஒரே ஒரு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சிறைச்சாலைக்குள் இவர்கள் சிறை அதிகாரிகள் கொடுக்கும் ஏதேனும் ஒரு கைத்தொழிலை செய்தால், இவர்களது சிறைத் தண்டனை காலம் குறைக்கப்படும் என்பது ஒன்றே அந்த வாய்ப்பு. அதாவது, சிறைக் கைதிகளின் நன்னடத்தைக்கு ஒவ்வொரு மாதமும் 6 நாட்கள்…

Read More
1 98 99 100 101 102 111