தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களைநோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய…

Read More

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. டெல்லி அமலாக்கப்பிரிவு கூடுதல் நீதிபதி ரூபி அல்கா குப்தா முன் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையின் பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும், அவர் குற்றம்சாட்டுவோர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. கார்த்தி சிதம்பரம் தவிர்த்து, தனியார் நிறுவனமான அட்வான்ட்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டன்சி நிறுவனம், அதன் இயக்குநர் பத்மா பாஸ்கரரமணா, ரவி விஸ்வநாதன், செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ், அதன் இயக்குநர் அண்ணாமலை பழனியப்பா ஆகியோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் பிரிவு4-ன்கீழ் குற்றப்பத்திரிகை…

Read More

நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்

நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கில், நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், வைர வியாபாரி நிரவ் மோடியும் அவர் உறவினர், மெஹுல் சோக்சியும், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது, சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து, இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். நிரவ் மோடி பிரிட்டனில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கும் மும்பை நீதிமன்றம், நிரவ் மோடிக்கு ஜாமினில் வெளியே வர…

Read More

‘பா.ஜ.,வில் ஊழல் செய்யாதது மோடி, ஆதித்யநாத் மட்டுமே’

‘பா.ஜ.,வில் ஊழல் செய்யாதது மோடி, ஆதித்யநாத் மட்டுமே’

‘பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத் ஆகிய இருவர் மட்டுமே, பா.ஜ.,வில், ஊழல் செய்யாதோர்; பிற தலைவர்களை பற்றி, அவ்வாறு கூற முடியாது,” என, உ.பி.,யைச் சேர்ந்த, பா.ஜ., – எம்.பி., கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,ஊழல்,செய்யாதது,மோடி, ஆதித்யநாத்,மட்டுமே உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், கைசர்கஞ்ச் லோக்சபா தொகுதி, எம்.பி.,யாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரிஜ் பூஷண் சரண் உள்ளார். இவர், காங்., தலைவர், ராகுலை, ‘குரைக்கும் நாய்’ என, விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர். இந்நிலையில், கோண்டா மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், பிரிஜ் பூஷண் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர்,…

Read More

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் நேற்று பெங்களூரு வந்தார். காலை சுமார் 11.30 மணிக்கு சிறையின் உள்ளே சென்ற டி.டி.வி. தினகரன், சசிகலாவை சந்தித்துவிட்டு மதியம் சுமார் 1 மணிக்கு வெளியே வந்தார்.

Read More

இந்தாண்டு இந்திய ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து

இந்தாண்டு இந்திய ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து

இந்தாண்டு இந்திய ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி சார்பில் நடத்தவிருந்த இப்தார் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டு தோறும் ரமலான் பண்டிகையையொட்டி, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி சார்பில் அரசியல் பிரமுகர்கள், வி.ஐ..பி.க்களுக்கு இப்தார் விருந்து வைப்பது வழக்கமாக இருந்தது. இடையில் எவ்வித காரணமின்றி நிறுத்தப்பட்டது. பின்னர் பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஜனாதிபதியாக இருந்த போது மீண்டும் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் இந்தாண்டு நடக்கவிருந்த இப்தார் விருந்து ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக இப்தார் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு; ஜூலை 10ந்தேதி வரை ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு நீதிமன்றம் தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு; ஜூலை 10ந்தேதி வரை ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு நீதிமன்றம் தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு ஜூலை 10ந்தேதி வரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இதில், ஜூலை 10ந்தேதி வரை அவரை கைது செய்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மனு மீது அடுத்த கட்ட விசாரணை ஜூலை 10ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு…

Read More

ஏழைகளுக்கு 50 லட்சம் வீடுகள்: மோடி பெருமிதம்

ஏழைகளுக்கு 50 லட்சம் வீடுகள்: மோடி பெருமிதம்

பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி பேசியதாவது: அரசு திட்ட பயனாளிகளுடன் நேரடியாக கலந்துரையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம், திட்டத்தின் பயன்கள் மற்றும் அதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வீட்டு வசதி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், 2022க்குள் அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், உழைத்து வருகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் பட்டியலை பார்த்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், நாங்கள், சமூகம், பொருளாதாரம், ஜாதி உள்ளிட்டவற்றை பார்த்து…

Read More

ரஜினியின் குரல் பாஜ., அல்லது அதிமுக.,வினுடையதா என சந்தேகமாக உள்ளது

ரஜினியின் குரல் பாஜ., அல்லது அதிமுக.,வினுடையதா என சந்தேகமாக உள்ளது

புதுச்சேரி சென்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், ரஜினியின் குரல் பாஜ., அல்லது அதிமுக.,வினுடையதா என சந்தேகமாக உள்ளது. சமூக விரோதிகள் யார் என தெரியும் என்ற ரஜினி நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதிக்கு போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது என்பது ரஜினிக்கு தெரியும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Read More

எதற்கெடுத்தாலும் போராட்டம்: தமிழ்நாடு சுடுகாடு ஆகும்: கோபத்தில் ரஜினி விளாசல்

எதற்கெடுத்தாலும் போராட்டம்: தமிழ்நாடு சுடுகாடு ஆகும்: கோபத்தில் ரஜினி விளாசல்

மக்கள், போராட்டம் போராட்டம் என போனால், தமிழகம் சுடுகாடாக மாறும் என நடிகர் ரஜினி கூறியுள்ளார். தூத்துக்குடி சென்று விட்டு திரும்பிய பின்னர் சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி தான் அதை கெடுத்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாளில் போராட்டத்தை கெடுத்தனரோ அதே போல், தூத்துக்குடியில் கெடுத்தனர். போலீசார் மீது தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். சமூக விரோதிகள் போலீசாரை தாக்கினர். கலெக்டர் அலுவலகத்தை சூறையாடினர். சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தது எனக்கு தெரியும். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். அவர்களை…

Read More
1 2 3 71