பப்ஜி மதன் வழக்கு – 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக பப்ஜி மதன் மீது குற்றம்சாட்டப்பட்டது.  இந்தநிலையில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த வழக்கில் பப்ஜி மதனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பப்ஜி மதன், மனைவி கீர்த்திகா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்தனர்.
பப்ஜி மதன் மீதான வழக்கில் 1,600 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது காவல்துறை.
32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் புகாரளித்த நிலையில் 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.