பெஞ்சமின் நெதன்யாஹு: இஸ்ரேலில் வலதுசாரிகள் அரசு அமைக்க முடியாததால் கலைந்த நாடாளுமன்றம்

பெஞ்சமின் நெதன்யாஹு: இஸ்ரேலில் வலதுசாரிகள் அரசு அமைக்க முடியாததால் கலைந்த நாடாளுமன்றம்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதை அடுத்து இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு சாதகமாக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக புதிய தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் செப்டம்பர் 17 நடைபெறும். 120 இடங்களை கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி 35 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. வலதுசாரி கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க பெஞ்சமின் முயன்றார். ஆனால், அவரால் முடியவில்லை. நரேந்திர மோதி பதவியேற்பு விழா: ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்? இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர…

Read More

மகனின் பதவி ஏற்பு விழாவை டிவியில் பார்த்து கைதட்டி ரசித்த மோடியின் தாயார்!

மகனின் பதவி ஏற்பு விழாவை டிவியில் பார்த்து கைதட்டி ரசித்த மோடியின் தாயார்!

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை,  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வீட்டிலிருந்து டி.வி.யில் மோடியின் தாயார் ஹீரா பென். பார்த்து கைதட்டி ரசித்தார். நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக  2-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டதையடுத்து, நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். மக்களவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமராக, நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார்.  அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள்…

Read More

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் இன்று நீட்டித்தது

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் இன்று நீட்டித்தது

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் இன்று (மே 30) காலை நீட்டித்தது. இவ்வழக்கில் கார்த்திக்கு எதிராக அப்ரூவராக மாற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திராணி முகர்ஜி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இவர் எந்நேரமும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என்ற நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு எம்.பி., எம்எல்ஏ.,க்கள் மீதான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. கார்த்தி தற்போது எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை, எம்பி, எம்எல்ஏ.,க்களுக்கான சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.

Read More

‘மு.க. ஸ்டாலின் இலங்கைக்கு வருகை தர வேண்டும்’ – சி.வி.விக்னேஸ்வரன்

‘மு.க. ஸ்டாலின் இலங்கைக்கு வருகை தர வேண்டும்’ – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கைக்கு வருகை தர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்தில் மேற்படி அழைப்பினை விக்னேஸ்வரன் விடுத்துள்ளார். நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியை அபார வெற்றிக்கு வழிநடத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என விக்னேஸ்வரன் எழுதியுள்ளார். திராவிட முன்னேற்ற கழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில்…

Read More

மோடி பதவியேற்பு விழாவில், ‘பிம்ஸ்டெக்’ தலைவர்கள் பங்கேற்பார்கள்

மோடி பதவியேற்பு விழாவில், ‘பிம்ஸ்டெக்’ தலைவர்கள் பங்கேற்பார்கள்

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில், ‘பிம்ஸ்டெக்’ தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.  கடந்த 2014ம் ஆண்டில் வெற்றி பெற்று பிரதமராக மோடி பதவியேற்ற போது, பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. 2வது முறையாக , வரும் 30ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி ‘பிம்ஸ்டெக்’ (வங்காள விரிகுடா நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு) அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட…

Read More
1 5 6 7 8 9 203