டிரம்ப்-கிம்ஜோங் பேச்சுவார்த்தை ரத்து

டிரம்ப்-கிம்ஜோங் பேச்சுவார்த்தை ரத்து

வடகொரிய அதிபர் கிம் ஜோங் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். வரும் ஜூன் மாதம் 12-ம் தேதி டிரம்ப் -கிம் ஜோங் உன் இடையே சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிம் ஜோங் உன் னுக்கு இன்று எழுதிய கடித்ததில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் அமெரிக்க அதிபர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அமெரிக்க துணை அதிபரின் சர்ச்சை பேச்சு குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் பேச்சுவார்த்தை ரத்து ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

இந்துக் கல்லூரியி பழைய மாணவர்கள் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா

இந்துக் கல்லூரியி பழைய மாணவர்கள் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா

யாழ்ப்பாணம்- காரைநகர் இந்துக் கல்லூரியி பழைய மாணவர்கள் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கனடா- ஸ்காபுறோ நகரில் உள்ள ஶ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாண்டின் பிரதம விருந்தினராக மருத்துவர் இராமலிங்கம் செல்வராஜாவும் அவரது பாரியார் மருத்துவர் சறோ செல்வராஜாவும், சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற இலங்கையின் பிரதி நில அளவையாளர் நாயகம் திரு முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக தமிழ்நாடு விஜேய் தெலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஸ்ரவன் சிறந்த தமிழிசைப் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் வழங்கினார். அவருக்கு பக்கவாத்தியக் கஞைர்களாக திருவாளர் ஜெயதேவன் நாயர் ( வயலின்)…

Read More

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் ஓய்வு

ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ரன்கள் அடித்த தென்ஆப்ரிக்கா வீரர் எனும் சாதனையையும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் மட்டையாளராகவும் , விக்கெட் கீப்பராகவும் துவக்கத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். மத்திய வரிசையில் இறங்கும் இவர் பல திசைகளிலும் அடித்து…

Read More

குமாரசாமி ஆட்சி மூன்று மாதங்கள் கூட நீடிக்காது: எடியூரப்பா

குமாரசாமி ஆட்சி மூன்று மாதங்கள் கூட நீடிக்காது: எடியூரப்பா

காங்.,ம.ஜ.த., கூட்டணி அரசு மூன்று மாதங்கள் கூட நீடிக்காது என எடியூரப்பா கூறினார். கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் 104 எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்., ம.ஜ.,த கூட்டணி அமைந்தது. ம.ஜ.த.கட்சியைச் சேர்ந்த குமாரசாமி இன்று முதல்வராக பதவியேற்றார். இது குறித்து எடியூரப்பா அளித்த பேட்டி, தனிப்பெரும் கட்சி பா.ஜ. என்ற முறையில் கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார். இதனை கர்நாடக மக்களும் ஏற்றுக்கொண்டனர். காங்., ம.ஜ.,த., கூட்டணி ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. இந்த கூட்டணி மூன்று மாதங்கள் கூட நீடிக்காது. அதற்குள் காணாமல் போய்விடும். குமாரசாமி பதவியேற்பு…

Read More

இலங்கையில் மழை வெள்ளம்: 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு, மீட்புப் பணி தீவிரம்

இலங்கையில் மழை வெள்ளம்: 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு, மீட்புப் பணி தீவிரம்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த மழை இன்று சற்று குறைந்திருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என இன்று மாலை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. 17 மாவட்டங்களில் இந்த சீரற்ற காலநிலை நிலவுகிறது. மழை வெள்ளத்தினால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 1000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. இவற்றில் 20 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 6,000 திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 80 திற்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு,…

Read More

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: துப்பாக்கிச்சூட்டுக்கு பலி 9

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: துப்பாக்கிச்சூட்டுக்கு பலி 9

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. கூட்டம் கூட்டமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள் கலெக்டர் அலுவலகத்தின் வாயில் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கலவரத்தை தொடர்ந்து, ஊழியர்கள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார், தடியடி நடத்தி கலவர கும்பலை வெளியேற்றியது. தொடர்ந்து கலவரம் நடந்ததால், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள். கிங்ஸ்டன்,…

Read More

Heart Failure, What You Should Know About Mitochondria

Heart Failure, What You Should Know About Mitochondria

Ask anyone what is the nation’s number one killer and most people will say heart attack. But how many know that congestive heart failure (CHF) is the fastest growing cause of heart disease in North America? Why is this happening? And why are mitochondria of vital importance, particularly as we all grow older? Congestive Heart Failure occurs for several reasons. A coronary attack may have destroyed cardiac muscle. Or hypertension over a period of years…

Read More

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ‘விலங்குகள்’ -டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ‘விலங்குகள்’ -டொனால்ட் டிரம்ப்

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் கலிபோர்னியாவில் இருந்து சட்ட அமலாக்க அதிகாரிகள் கலந்து கொண்ட வட்டமேஜை கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசும்போது கூறியதாவது:- சட்டவிரோதமாக மக்கள் நாட்டிற்கு வருவதை வர முயற்சிப்பதை நாம் வெகுவாக நிறுத்தி இருக்கிறோம். அப்படி வருபவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுகிறோம். இந்த மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று நீங்கள் நம்பமாட்டீர்கள். இவர்கள் மக்கள் அல்ல விலங்குகள். பலவீனமான சட்டங்களின் காரணமாக அவர்கள் நாட்டிற்குள் விரைந்து வருகிறார்கள். நாம் பிடிக்கிறோம், விடுதலை செய்கிறோம் மீண்டும் பிடிக்கிறோம் மீண்டும் அவர்களை விடுதலை செய்கிறோம் இது பைத்தியக்காரத்தனம். முட்டாள் சட்டங்களால் நாட்டில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரிக்கிறது. கலிஃபோர்னியா சட்டமானது…

Read More

“மத்திய அரசு திருப்பதி கோயில் நிர்வாகத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறது’ தெலுங்கு தேசம் பகிரங்க குற்றச்சாட்டு

“மத்திய அரசு திருப்பதி கோயில் நிர்வாகத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறது’ தெலுங்கு தேசம் பகிரங்க குற்றச்சாட்டு

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் நாட்டிலேயே அதிக சொத்து கொண்டதாகவும், வருவாய் அதிகம் கொண்டதாகவும் இருந்து வருகிறது. கோயிலின் நிர்வாகம் ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வாயிலாக நடந்து வருகிறது. சமீபத்தில் தேவஸ்தானத்திற்கு மத்திய தொல்லியியல் துறை எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திராவில் இருந்து எதிர்ப்பு எழவும் சர்ச்சைக்குரிய கடிதத்தை தொல்லியியல் துறை திரும்ப பெற்றது. திருப்பதி கோயிலில் பணி புரியும் அர்ச்சகர்களை 65 நிரம்பியவர்களுக்கு கட்டாய ஓய்வு என தேவஸ்தானத்தின் புதிதாக அமைக்கப்பட்ட அறக்கட்டளை வாரியம் முடிவு எடுத்து உள்ளது. இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கோயிலின் தலைமை அர்ச்சகர் ராமனா தீட்சிதுலு, கோவில் நிர்வாகம்…

Read More
1 2 3 4 5 6 185