ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் உரையாற்ற பிரணாப் திட்டம்

ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் உரையாற்ற பிரணாப் திட்டம்

மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில், முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, 82, உரையாற்ற உள்ளார். ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் உரையாற்ற பிரணாப் திட்டம் இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., மூத்த அதிகாரி ஒருவர், நேற்று கூறியதாவது: நாக்பூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் உரையாற்ற வரும்படி, முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு அழைப்புவிடுத்துள்ளோம். அந்த அழைப்பை, பிரணாப் ஏற்றுள்ளார். ஜூன், 7ல், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் முன், அவர் உரையாற்றுவார். இவ்வாறு அவர் கூறினார். இத்தகவலை, பிரணாப் முகர்ஜி அலுவலகம், இதுவரை உறுதி செய்யவில்லை. மூத்த, காங்., தலைவரானபிரணாப் முகர்ஜி, கடந்தாண்டு ஜூலையில், ஜனாதிபதி பதவியில் இருந்து, ஓய்வு பெற்றார்.அவர், முன்னாள் பிரதமர்கள், இந்திரா, ராஜிவ் உடன்பணியாற்றியவர். ஜனாதிபதியாக பதவி…

Read More

‘ஸ்பைடர் மேன்’ போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய வாலிபர்

‘ஸ்பைடர் மேன்’ போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய வாலிபர்

பாரிஸின் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் பாரிசில் மேற்கு ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து குடிபெயர்ந்தவர் கசாமா (வயது 22) . அவர் குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலவாக பரவியது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார். இது குறித்து வாலிபர் கூறியதாவது; அது ஒரு குழந்தை என்பதால் நான் செய்தேன். நான் ஏறினேன்… கடவுள் அவருக்கு நன்றி சொன்னேன். ” கசாமாவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்…

Read More

தனுஷின் அடுத்த புதுப்படங்களின் பட்டியல்

தனுஷின் அடுத்த புதுப்படங்களின் பட்டியல்

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபக்கிர்’. கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சில் தயாராகியுள்ளது. காமெடி அட்வெஞ்சர் படமான இது, ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (மே 30) இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷனில் தற்போது ஈடுபட்டுள்ளார் தனுஷ். கார்த்தியின் அடுத்தபடத் தலைப்பு ‘தேவ்’? இந்தப் படத்துக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ ஆகிய படங்களின் மீதமுள்ள காட்சிகளில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இதுதவிர, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதமுள்ள காட்சிகளில் நடிக்க…

Read More

நிரவ் மோடியின் ரூ.7,000 கோடி சொத்து பறிமுதல் அமலாக்கத் துறை நடவடிக்கை

நிரவ் மோடியின் ரூ.7,000 கோடி சொத்து பறிமுதல் அமலாக்கத் துறை நடவடிக்கை

பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியின், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, உடனடியாக பறிமுதல் செய்வதற்கான அனுமதி கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யவுள்ளது. மும்பையை சேர்ந்தவர் வைர வியாபாரி நிரவ் மோடி. இவரது உறவினர் ‘கீதாஞ்சலி ஜெம்ஸ்’ நிறுவன அதிபர், மெஹுல் சோக்சி.இவர்கள் இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில், அதன் அதிகாரிகள் உதவி யுடன், 13 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாடுகளுக்கு தப்பி யோடினர். இவர்களுக்கு எதிராக, சி.பி.ஐ., அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும், பஞ்சாப் நேஷனல்…

Read More

இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார கனடா உதயன் இ-பேப்பர் (E-Paper) புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்?

இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்?

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா (62 வயது) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு, இரத்மலானை, ஞானாந்த பகுதியில் நேற்றிரவு (மே 24) 8.30 அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்கு அருகில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு – களுபோவில மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு இன்று (25) அதிகாலை புறப்பட்ட தயாராக இருந்த சந்தர்ப்பத்தில் நேற்றிரவு…

Read More

குடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்

குடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்

மத்தியப்பிரதேச மாநிலத்தில், சத்தர்பூர் மாவட்டத்தில் 70 வயது முதியவர் கடந்த 18 மாதங்களாக ஒற்றைஆளாய் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மத்தியப்பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டம், பிரதப்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் லோதி(வயது70). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பிரதப்புரா கிராமத்தில் தனது சகோதரர் ஹல்கே லோதியின் குடும்பத்தினருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்குச் சொந்தமாக சில ஏக்கர்கள் நிலம் இருக்கிறது. ஆனால், விவசாயம் செய்ய நிலம் இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை, பருவமழை பொய்ப்பு போன்ற காரணங்களால், விவசாயத்தை முறையாகச் செய்யமுடியவில்லை. கோடைகாலத்தில் குடிப்பதற்கும் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. இதையடுத்து, சீதாராம் லோதி தனது நிலத்தில் கிணறு வெட்டத் தீர்மானித்தார். கடந்த 2015-ம் ஆண்டு பிறபகுதியில்…

Read More

இந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்

இந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்

ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள இந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 15 பேர் படுகாயமடைந்துள்ள இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் டோரோண்டா ட்ராயுமா சென்டரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள சிபிசி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த பயங்கர சம்பவம் குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாம்பே பேல் என்னும் இந்திய உணவகத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் உணவகத்தினுள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் குண்டு வெடிப்புக்குள்ளான இந்திய உணவகம் போலீசாரின் கட்டுபாட்டின் கீழ்…

Read More

மகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தயார்

மகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தயார்

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இளம்வயது மகளை ஏமாற்றி முதியவருக்கு திருமணம் செய்து வைத்துள்ள வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரும் பாகிஸ்தானிய 42 வயது பெண் ஒருவர் தனது 13 வயது மகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று அங்கு தனது உறவினரான அவரைவிட 16 வயது அதிகமான நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்தை அடுத்து முதலிரவும் முடிந்த நிலையில் குறித்த சிறுமி இங்கிலாந்து திரும்பிய சில மாதங்களில் கருக்கலைப்புக்கும் உட்படுத்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தமது மகளுக்கு 18 வயது முடிந்த நிலையில் அந்த பெண் மீண்டும் தனது மகளுடன்…

Read More

மழை வேண்டி 41 யாகங்கள்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அரசு முடிவு

மழை வேண்டி 41 யாகங்கள்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அரசு முடிவு

இந்தப் பருவத்தில் மழை நன்றாகப் பொழிவதை வேண்டி 41 யாகங்களை 33 மாவட்டங்களில் மேற்கொள்ள குஜராத் முதல்வரான விஜய் ரூபானி அரசு முடிவெடுத்துள்ளது. மே 31ம் தேதி 33 மாவட்டங்களில் இந்த ‘பர்ஜன்ய யாகம்’ நடைபெறுகிறது. குஜராத்தில் இந்த கோடையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது, மாநிலத்தின் நீராதாரங்கள் வேகமாக வற்றி வருகின்றன. இந்நிலையில் வரும் பருவமழை நீர் வீணாகமல் தடுக்க நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த யாகங்களில் முதல்வர் விஜய் ரூபானி, மாநில அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். நடப்புக் கோடையில் இந்தியாவில் நீர் நெருக்கடியைச் சந்தித்து வரும் மாநிலங்களில் குஜராத்தும் உள்ளது. மொத்தமாக இந்த…

Read More
1 2 3 4 5 185