மகிந்தாவின் ஆட்சிக் காலத்தைப் போன்றே மைத்திரியின் ஆட்சியிலும் குறிவைக்கப்படும் ஊடகவியலாளர்கள்

மகிந்தாவின் ஆட்சிக் காலத்தைப் போன்றே மைத்திரியின் ஆட்சியிலும் குறிவைக்கப்படும் ஊடகவியலாளர்கள்

முன்னைய ஜனாதிபதியும் கொலைக்கரங்களுக்குச் சொந்தக்காரருமான மகிந்தா ராஜபக்;சா காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல, சிங்கள மொழி பேசும் ஊடகவியலாளர்களில் யார் யார், மகிந்தாவின் ஆட்சியை விமர்சிக்கின்றார்களோ, அவர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இவ்வாறு மகிந்தாவின் ஏற்பாட்டில் கோத்தபாயவினால் திட்டமிட்டு கொல்லப்பட்ட லசந்த என்னும் சிங்கள மொழி பேசும் ஆங்கில பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விதம் மிகவும் கொரூரமானது. இதைப்போன்று யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் நிமலராஜன், மற்றும் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிரேஸ்ட பத்திரிகையாளர் நடேசன் ஆகியோரது படுகொலைகள் எமது இனத்திற்கு இன்னும் சோகத்தை சுமந்து நிற்கும் சம்பவங்களாகவெ தொடர்கின்றன. அதிலும் சிரேஸ்ட பத்திரிகையாளர் நடேசன் அவர்களின் 14வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்ற இந்த நாட்களில்…

Read More

கொல்லப்பட்ட ரஷ்ய பத்திரிகையாளர் உயிருடன் திரும்பினார்

கொல்லப்பட்ட ரஷ்ய பத்திரிகையாளர் உயிருடன் திரும்பினார்

ரஷ்ய பத்திரிகையாளரான ஆர்காடி பாப்செங்கோ (41) கடந்த செவ்வாயன்று உக்ரைனிலுள்ள அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. இதனை கண்டு அவரது குடும்பத்தினரும் அவரது சக ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் படம் ஒன்றும் பத்திரிகைகளில் வெளியானது. ரஷ்ய பாதுகாப்புப்படையினர் ஆர்காடியையைக் கொல்வதற்காக உக்ரைனைச் சேர்ந்த ஒருவனுக்கு 40,000 டாலர்கள் கொடுத்திருந்தனர். அந்த மனிதன் அவரை கொல்ல இன்னொரு மனிதனை வேலைக்கு அமர்த்தினான். அவர்கள் யாரெனக் கண்டுபிடித்த உக்ரைன் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் நண்பர்களும் உறவினர்களும் ஆர்காடியின் இறுதிச் சடங்கிற்காக ஆயத்தமானர்கள். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஆர்காடி தொலைக்காட்சியில் தோன்றினார். தான் இறந்ததாக செய்தி…

Read More

வாட்சப்பிற்கு போட்டியாக பதஞ்சலியின் கிம்போ : பாபா ராம்தேவ் அறிமுகம்

வாட்சப்பிற்கு போட்டியாக பதஞ்சலியின் கிம்போ : பாபா ராம்தேவ் அறிமுகம்

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், வாட்சப் செயலி(app)க்கு போட்டியாக, கிம்போ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் திஜாராவாலா, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த கிம்போ செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். எங்களது சுவதேசி மெசேஜிங்பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டு, இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இலவச தொலைபேசி அழைப்புகள், வீடியோ காலிங் வசதிகளோடு மட்டுமல்லாது ஆடியோ, போட்டோஸ், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், குயிக்கீஸ், லொகேசன், ஜிப், டூடூல் உள்ளிட்ட வசதிகள் அடங்கியதாக இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனம், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது வாட்சப்பிற்கு…

Read More

ரஜினியின் குரல் பாஜ., அல்லது அதிமுக.,வினுடையதா என சந்தேகமாக உள்ளது

ரஜினியின் குரல் பாஜ., அல்லது அதிமுக.,வினுடையதா என சந்தேகமாக உள்ளது

புதுச்சேரி சென்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், ரஜினியின் குரல் பாஜ., அல்லது அதிமுக.,வினுடையதா என சந்தேகமாக உள்ளது. சமூக விரோதிகள் யார் என தெரியும் என்ற ரஜினி நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதிக்கு போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது என்பது ரஜினிக்கு தெரியும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Read More

மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் – சிவசேனை

மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் – சிவசேனை

யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சில தினங்களுக்கு முன்னதாக பசுவதையை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். காவி உடையணிந்தவர்கள் உட்பட சிலர் அதில் பங்கேற்றிருந்தனர். அங்கு உரையாற்றிய போது சச்சிதானந்தம் வெளியிட்ட கருத்தே இங்கு தமிழ் மற்றும் ஏனைய சில சமூகங்களின் மத்தியில் கண்டனத்தை தோற்றுவித்துள்ளது. இலங்கையை ஒரு பௌத்த – இந்து நாடு என்று வர்ணித்த சச்சிதானந்தம், “இது வேறு சமூகத்தவர்களுக்கான நாடு அல்ல, இங்குள்ள பாரம்பரியத்தை ஏற்று நடக்காதவர்கள், நாட்டைவிட்டு வெளியேறி தமது பாரம்பரியங்களை பின்பற்றும் நாடுகளுக்கு போகலாம்” என்று கூறினார். சவுதி அரேபியாவில் பாதிப்பேர் இஸ்லாம் அல்லாதவர்கள் என்றும் ஆனால், அங்கு இஸ்லாத்துக்கு…

Read More

ஒபாமா உதவியாளர் குறித்து ட்விட்டரில் கிண்டல்: நிகழ்ச்சியை ரத்துசெய்தது டிவி சேனல்

ஒபாமா உதவியாளர் குறித்து ட்விட்டரில் கிண்டல்: நிகழ்ச்சியை ரத்துசெய்தது டிவி சேனல்

டிவி நட்சத்திரம் ரோஸன்னி தனது ட்வீட்டரில் நிறவெறியோடு ஒபாமா உதவியாளர் குறித்து வெளியிட்ட கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் பங்கேற்று வழங்கிவந்த நகைச்சுவை டிவி நிகழ்ச்சி திடீர் ரத்தாகியுள்ளது. ஏபிபி நெட்வொர்க் சேனல் இந்த டிவி நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டதாக ரிபோர்ட்டர்ஸ் சிஎன்என்.காம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை ட்விட்டரில் கிண்டல் செய்த சித்தார்த் இதுகுறித்து ஏபிசி நெட்வொர்க் சேனல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ரோஸன்னி ட்விட்டர் அறிக்கை வெறுக்கத்தக்க வகையில் உள்ளது. நாங்கள் கொண்டுள்ள விழுமியங்களுடன் சற்றும் பொருந்தக்கூடிய வகையில் அவரது ட்விட் அமைந்திருக்கவில்லை. இதனால் அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரத்துசெய்ய முடிவு செய்துள்ளோம்’’ என தெரிவித்துள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக்…

Read More

எதற்கெடுத்தாலும் போராட்டம்: தமிழ்நாடு சுடுகாடு ஆகும்: கோபத்தில் ரஜினி விளாசல்

எதற்கெடுத்தாலும் போராட்டம்: தமிழ்நாடு சுடுகாடு ஆகும்: கோபத்தில் ரஜினி விளாசல்

மக்கள், போராட்டம் போராட்டம் என போனால், தமிழகம் சுடுகாடாக மாறும் என நடிகர் ரஜினி கூறியுள்ளார். தூத்துக்குடி சென்று விட்டு திரும்பிய பின்னர் சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி தான் அதை கெடுத்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாளில் போராட்டத்தை கெடுத்தனரோ அதே போல், தூத்துக்குடியில் கெடுத்தனர். போலீசார் மீது தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். சமூக விரோதிகள் போலீசாரை தாக்கினர். கலெக்டர் அலுவலகத்தை சூறையாடினர். சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தது எனக்கு தெரியும். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். அவர்களை…

Read More

முன்னாள் உபவேந்தர் மீதான ஊழல் விசாரணை தொடக்கம்

முன்னாள் உபவேந்தர் மீதான ஊழல் விசாரணை தொடக்கம்

இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், பதவியில் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன. இதற்கிணங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட ரலப்பனாவ எனும் தனி நபரைக் கொண்ட சுயதீன ஆணைக்குழு நேற்று (திங்கள்கிழமை) ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது. இதன்போது பல்கலைகழகத்தின் பதிவாளர், பிரதிப் பதிவாளர், விரிவுரையாளர்கள், விடுதிப் பொறுப்பாளர், முன்னாள் பொறியியலாளர், வேலை மேற்பார்வையாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது. இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்? இலங்கை: தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்கு 11 சிறார்கள் பலி…

Read More

வரலாறு காணாத மழை; ஏமன் – ஓமனில் 15 பேர் பலி

வரலாறு காணாத மழை; ஏமன் – ஓமனில் 15 பேர் பலி

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் ஓமனில், ‘மேகுனு’ என்ற புயல் கரையைக் கடந்ததில்,ஒரே நாள் பெய்த கன மழையில் 3 இந்தியர்கள் உட்பட, 15 பேர் பலியாகினர். அரபிக்கடலில் உருவான மேகுனு புயல் தீவிர மடைந்து, ஏமனின், சொகோட்ரா தீவை நேற்று தாக்கியது. அப்போது, கடும் சூறாவளிக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதைத் தொடர்ந்து, ஓமனின் சில பகுதிகளையும் தாக்கி, கரையைக் கடந்தது. இதனால், ஓமனின் மூன்றாவது பெரிய நகரமான, சலாலாவில், மணிக்கு, 170 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதுடன், கன மழை கொட்டித் தீர்த்தது. அதாவது 3 வருடத்துக்கு அங்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்…

Read More
1 2 3 4 185