சென்னை – பெங்களூரு இடையேயான போட்டி: புழுதிப்புயல் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம்

சென்னை – பெங்களூரு இடையேயான போட்டி: புழுதிப்புயல் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டாஸ் மாலை 7 மணிக்கு சுண்டப்படுவதாக இருந்தது. ஆனால், சார்ஜாவில் போட்டி நடைபெறும் மைதானத்தில் புழுதிப்புயல் வீசி வருகிறது. இதனால், இன்றைய போட்டியில் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Read More

தமிழ்நாட்டில் இன்று 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 53 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 17 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,631 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 1 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35…

Read More

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்

சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களைப் பற்றிய அவதூறான வகையில் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீராமிதுனை கடந்த ஆகஸ்ட் 14 தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது.

Read More

கொரோனா:விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணியில் தொய்வு; மயில்சாமி அண்ணாதுரை

கொரோனா:விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணியில் தொய்வு; மயில்சாமி அண்ணாதுரை

இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது;- கொரோனாவால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறைவேற 3 ஆண்டுகள் ஆகும்;  3வது நிலவு பயணமும் தள்ளி போகிறது. விமான பயணம் போல விண்வெளி செல்வதற்கு வாகனங்கள் உருவாகும். செவ்வாய் கிரகத்தில் தாவரம் வளர்ப்பதற்கான மூலக்கூறுகள் ஆராயப்படும். சந்திரயான்3 செயற்கைகோள் 1 ஆண்டுக்குள் அனுப்பப்படும்.ஆளில்லா விண்கலம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும். நிலத்திலும், நீரிலும் வரும் எல்லை பிரச்சினைகள் வானிலும் வரக் கூடாது என விஞ்ஞானிகள் செயலாற்றி வருகின்றார். வானில் உள்ள செயற்கைகோள் கழிவுகளை அகற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன என கூறினார்.

Read More

கனடாவில் ஆட்சியை தக்க வைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் ஆட்சியை தக்க வைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா நாட்டில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்று உள்ளது. ஆனால் அவர்து கட்சி பெரும்பான்மை பெறவில்லை. ஜஸ்டினின் லிபரல் கட்சி 148 இடங்களிலும், கனசர்வேட்டிவ் கட்சி 103 இடங்களிலும் பிளாக் கியூபெகோயிஸ் 28 இடங்களிலும், இடதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி 22 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

Read More

இந்து மடாதிபதி மரணம்: குற்றவாளிகள் தப்ப முடியாது; முதல்-மந்திரி பேட்டி

இந்து மடாதிபதி மரணம்: குற்றவாளிகள் தப்ப முடியாது; முதல்-மந்திரி பேட்டி

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதிய அகாரா பரிஷித் மடத்தின் தலைவர் மகந்த் நரேந்திர கிரி தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதுபற்றிய காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கடிதங்களில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  இந்நிலையில், நரேந்திர கிரியின் உடலுக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி…

Read More

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டினை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். இந்த தொலைபேசி உரையாடலின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Read More

கஜகஸ்தான்: போலீசார் மீது துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

கஜகஸ்தான்: போலீசார் மீது துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

கஜகஸ்தான் மத்திய ஆசியாவில் அமைந்துள்ளது. இதற்கிடையில், அந்நாட்டின் அல்மெடி மாகாணம் அக்பலக் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த நபரை அந்த வீட்டை விட்டு வெளியேற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த நபரை வீட்டு விட்டு வெளியேற்றுவதற்கான உத்தரவுடன் கோர்ட்டு அதிகாரி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது, அந்த வீட்டை விட்டு வெளியேற மறுத்த அந்த நபர் போலீசார் மற்றும் கோர்ட்டு அதிகாரி மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் பொதுமக்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அக்பலக் மாவட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டு துப்பாக்கிச்சூடு…

Read More

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து – நிர்மலா சீதாராமன்

நாட்டில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017- ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.  ஜி.எஸ்.டி. நடைமுறை அமலுக்கு வந்தது முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதிமந்திரி தலைமையில் நடைபெற்று வருகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: -பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து…

Read More

இந்திய மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ .2,427 கோடியை விடுவித்துள்ளது

இந்திய மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ .2,427 கோடியை விடுவித்துள்ளது

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியினை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத்துறை விடுவித்துள்ளது. இதன்படி 11 மாநில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக ரூ.2,427 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கான பங்காக ரூ.2,67.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்படும் முதல் தொகை ஆகும். இந்த நிதியானது குடிநீர், சுகாதாரம், மழைநீர் சேமிப்பு, நீர் மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்காக செலவிடப்பட உள்ளது. அத்துடன் தொகை வரப்பெற்ற 10 நாட்களுக்குள்ளாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த தொகையை மாற்ற வேண்டும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு…

Read More
1 2 3 385