போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனைதான் என்ற தீர்மானத்திலிருந்து நான் பின்வாங்கமாட்டேன் முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனைதான் என்ற  தீர்மானத்திலிருந்து நான்  பின்வாங்கமாட்டேன்  முல்லைத்தீவில்  ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான கட் டமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கட்டணமற்ற துரித தொலைபேசி இலக்கமொன்றும் இதன் போது ஜனாதிபதி அறிமுகப்படுத் தப்பட்டது. அதற்கமைய 1984 என்ற இலக்கத்தினூடாக இந்த தகவல்களை வழங்க முடியும். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இலங்கையில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக தனது வேண்டுகோளுக்கமைய பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, அதற்காக வழங்கக்கூடிய தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்பில் கண்டறிவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் நிபுணர் குழுவொன்று வெகுவிரைவில் வருகை தரவுள்ளதாக தெரிவித்தார். போதைப்பொருள் பாவனை காரணமாக சீரழிவுகளுக்கு முகங்கொடுத்திருந்த பிலிப்பைன்ஸ்நாடு, அந்நாட்டு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் காரணமாக இன்று அந்த சவாலினை வெற்றிகொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்….

Read More

ஜனாதிபதி அறிவித்த வண்ணம் வலிகாமல் வடக்கில் காணிகள் விடுவிக்கப்படாததால் ஏமாற்றமடைந்த மக்கள்

ஜனாதிபதி அறிவித்த வண்ணம் வலிகாமல்  வடக்கில் காணிகள் விடுவிக்கப்படாததால் ஏமாற்றமடைந்த மக்கள்

வலிகாமம் வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் நேற்று விடுவிக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த திங்கட்கிழமை தமது காணிகளுக்குச் செல்லவந்த காணிஉரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். வடக்கில் ஆயிரம் ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை அன்றைய தினம் மீளமக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் வைத்து தெரிவித்திருந்தார். இதன்படி யாழ்.வலி வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணிகளும், ஓட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணிகளும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திங்கள் காலை குறித்த காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை பார்ப்பதற்கு சென்றிருந்தனர். எனினும் எவரையும்…

Read More

ஜெனிவாவுக்காகவே அரசியல் யாப்பு! எமது மக்களுக்காக அல்ல: – சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

ஜெனிவாவுக்காகவே அரசியல் யாப்பு! எமது மக்களுக்காக அல்ல:   –  சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

ஜெனிவா பிரச்சினையில் இருந்து தப்பிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் அரசியல் யாப்பு விடயத்தைகையில் எடுத்திருப்பதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர்,அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களின் பலவருட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே என்பது எமது எண்ணம்.ஆனால் இவ்வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழர் சம்பந்தமாக நாம் ஏதோ சில நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் என்று ஜெனீவாவில் எடுத்துக் காட்டி மேலும் அரசாங்கத்திற்கு தவணை எடுக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல.ஜெனீவா பிரச்சினையில் இருந்து தப்பி விடவேண்டும் என்பதே அரசாங்கத்தின் அதியுச்சஅவாவும் ஆசையும்.நாம்…

Read More

பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண ட்ரம்ப், எர்டோகன் ஆகியோருக்கிடையில் இணக்கப்பாடு

பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண ட்ரம்ப், எர்டோகன் ஆகியோருக்கிடையில் இணக்கப்பாடு

சிரியா விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளனர். சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி; ட்ரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர். இதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயற்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலை ஏற்படும்.இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், துருக்கி ஜனாதிபதி தாயிப் எர்டோகனும் தொலைபேசி…

Read More

அடுத்த கட்டம் குறித்து தீர்மானம் எடுப்பதில் சிரமப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தiiமை – கொழும்பிலிருந்து பாலச்சந்திரன்

அடுத்த கட்டம் குறித்து தீர்மானம் எடுப்பதில் சிரமப்படும்  தமிழ் தேசிய கூட்டமைப்புத் தiiமை  –  கொழும்பிலிருந்து பாலச்சந்திரன்

இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அணுகுமறைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தவரை அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதில் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்குகிறது.எடுக்கக்கூடிய எந்தத் தீர்மானமுமே பிரச்சினையைத் தந்துவிடுமோ என்று அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஒரு புறத்திலே, கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டியிருப்பதுடன் அதற்கு முட்டுக்கொடுக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழர்களுக்கு விரோதமானவராக நோக்கப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிரக்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவுக்கு நேர்முரணாக விக்கிரமசிங்கவை தங்களது நலன்களிலும் அக்கறைகளிலும் அனுதாபம் கொண்டவராக தமிழர்கள் நோக்குகிறார்கள். ராஜபக்சவை ஆட்சியதிகாரத்திலிருந்து விலக்கிவைத்திருப்பதற்கு கூட்டமைப்பு அதனால் இயன்ற சகலதையும் செய்யவேண்டியிருக்கிறது. ஆனால்,…

Read More

கேரளாவின் சபரிமலையில் “மழை விட்டும் தூவானம் விட வில்லை” போன்று சர்ச்சைகள் தொடர்கின்றன – சிவலிங்கம் சிவகுமாரன்

கேரளாவின் சபரிமலையில் “மழை விட்டும் தூவானம் விட வில்லை” போன்று சர்ச்சைகள் தொடர்கின்றன – சிவலிங்கம் சிவகுமாரன்

மழை விட்டும் தூவானம் விட வில்லை என்பது போன்று சபரிமலையில் கடந்த 14 ஆம் திகதி மகரஜோதி பெருவிழா நிறைவடைந்து பருவகாலம் முடிந்தும் இத்தலத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடாது என்ற சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.. இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரை இலங்கையிலிருந்தே பெருந்தொகையான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர். இவர்களில் எத்தனைப்பேர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அதன் பின்னர் வெளிப்படுத்தப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்தும் செவிமடுத்திருப்பார்கள் என்பதும் கேள்விக்குறியே. சபரிமலைக்கு 10 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் வழிபாடு செய்ய அனுமதியில்லை என்ற தடையானது இந்திய அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது அல்ல என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து உருவான சர்ச்சைகள்,கலவரங்கள்,…

Read More
1 2 3 6