மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது. இதனை ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் குடிக்கின்றனர். இப்படி அங்கு தலைநகர் கோலாலம்பூரிலும், செலங்கோர் மாகாணத்திலும் உள்நாட்டு சாராயம் குடித்தவர்களில் 57 பேர் மயங்கி சரிந்தனர். மெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் வி‌ஷத்தன்மை கலந்து இருந்ததை அறியாமல் அவர்கள் குடித்து உள்ளனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. உள்நாட்டு…

Read More

முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்

முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்

முத்தலாக் முறையை ரத்து செய்யும் அவசர சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.முத்தலாக் சட்ட மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதா லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்ததை அடுத்து ஜனாதிபதியும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது இஸ்லாமிய பெண்களுக்கு…

Read More

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சர்வஜனிக் மண்டல்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. 1½ நாள் வழிபாட்டுக்கு பின்னர் 43 ஆயிரம் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இந்தநிலையில், 5-வது நாளான நேற்று பக்தர்கள் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடல், குளம் மற்றும் மாநகராட்சியின் செயற்கை குளம் ஆகிய நீர்நிலைகளில் கரைத்தனர். விநாயகர் சிலைகளை நீர்நிலைகளுக்கு லாரிகள், சரக்குவேன், தள்ளுவண்டிகளில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். மேலும் ஏராளமானவர்கள் தங்கள் வீட்டில் பிரதிஷ்டை செய்த கணபதி சிலைகளை கையில் ஏந்தியபடியே கொண்டு வந்தனர். அப்போது, வண்ண, வண்ண…

Read More

இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்

இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையின் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும், தமக்கெதிராக எவ்வித வழக்குகளும் தொடுக்கப்படவில்லை எனக் கூறியும், தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கோரியும் அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு, உடல் நலக்குறைவுடன் இருந்த ஒரு சிறைக்கைதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவர் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போராட்டம் குறித்து,…

Read More

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ முல்லக்கல், முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில், அவரிடம் விசாரணை நடத்திய போது, 15 விஷயங்களில் முரண்பாடு காணப்பட்டது என கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு என்ற இடத்தில் உள்ள சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர், பிஷப் பிரான்கோ முல்லக்கல் 2014ம் ஆண்டு முதல், 2016 வரை 14 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் முல்லக்கல் பதவியை தற்காலிகமாக ராஜினாமா…

Read More

” சமூகத்திற்காக உழைக்கும் ஆர்.எஸ்.எஸ்., ” – மோகன் பகவத்

” சமூகத்திற்காக உழைக்கும் ஆர்.எஸ்.எஸ்., ” – மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும் திணிப்பது இல்லை என டில்லியில் நடந்த எதிர்கால பாரதம் என்ற தலைப்பில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., கருத்தரங்கில் தலைவர் மோகன்பகவத் பேசுகையில் குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ்., தனித்துவம் கொண்டது. இந்த இயக்கத்தின் தரத்திற்கு இணையாக வேறு இயக்கம் இருக்க முடியாது. எங்கள் கொள்கையை யாருக்கும் திணிக்கவில்லை. கொள்கையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.,இன்று வரை தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. நாட்டின் கட்டமைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறோம். மக்களை இணைத்து செல்லவே விரும்புகிறோம். சமூகத்திற்காக நாங்கள் உழைக்கிறோம். ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பலத்தை நிரூபிக்கிறது. சிறை செல்வது தேசபக்தி அல்ல என்று ஹெட்கேவர் கூறுவார். மற்ற மக்களுடன் இணைந்து நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பார். இதனையே…

Read More

2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்கிறார் மகிந்த ராஜபக்ச

2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்கிறார்  மகிந்த ராஜபக்ச

2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்றும், தாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்று முன்மொழியப்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘திதற்போது இந்தியாவில் தங்கியிருக்கும் மகிந்த அங்கு “த ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்தப் பொறிமுறை, 2008-2009 காலப்பகுதியில், விடுதலைப் புலிகளுடனான போரின் போது, இந்திய- இலங்கை உறவுகளை ஒருங்கிணைப்பதற்காக, இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்,வெளிவிவகாரச் செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய்சிங் ஆகியோரையும், இலங்கை தரப்பில் பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, லலித்…

Read More

அவுஸ்த்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதானார்கள்

அவுஸ்த்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதானார்கள்

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த செவ்வாய்கிழமையன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் பல்வேறு காலகட்டங்களில் புகலிடம் கோரிய, 9 இலங்கையர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் பேர்த் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் பலவந்தமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். அன்றைய தினம இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்ததை அடுத்து, அவுஸ்ரேலிய அதிகாரிகளால் இந்த 9 பேரும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து இந்த 9 பேரையும் கைது செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்….

Read More

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த  வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைக் கோருதலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையின் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் 131வது அமர்வு கடந்த புதன்கிழமையன்று கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போது, கடந்த அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கோர வேண்டுமென்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுக்க வேண்டுமென்றும் கடந்த…

Read More

யாழ்ப்பாணத்தில் ஆயுதங்களுடன் பொலிஸ் வாகனம் ஒன்று கடத்தப்பட்டது

யாழ்ப்பாணத்தில் ஆயுதங்களுடன் பொலிஸ் வாகனம்  ஒன்று கடத்தப்பட்டது

பொலிஸாரின் வாகனமொன்றை இனந்தெரியாதோர் கடத்திச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பாலாவிப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அங்கு பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு அங்கு பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பொலிஸாரின் வாகனத்தை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றுள்ளனர். குறித்த வாகனத்திற்குள் பொலிஸாரின் ஆயுதங்களும் காணப்பட்டதாகவும் அந்த வாகனத்துடன் நின்ற பொலிஸாரைத் தாக்கிவிட்டே வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஆயுதங்களுடன்…

Read More
1 5 6 7 8 9 36