போதை மருந்து கடத்தல் குறையுமா? இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு

போதை மருந்து கடத்தல் குறையுமா? இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சி திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ராவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. பிராந்திய பாதுகாப்பிற்காக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பின் மூலம் இணக்கப்பாடுடன் செயற்படுவது குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,…

Read More

தி.மு.க., ஆட்சியில், மதுரைக்குள் நுழைய முடியாத ஸ்டாலின், தற்போது அதே மதுரையில், சுதந்திரமாக நடைப்பயிற்சி செய்கிறார் – முதல்வர், இ.பி.எஸ்

தி.மு.க., ஆட்சியில், மதுரைக்குள் நுழைய முடியாத ஸ்டாலின், தற்போது அதே மதுரையில், சுதந்திரமாக நடைப்பயிற்சி செய்கிறார் – முதல்வர், இ.பி.எஸ்

தி.மு.க., ஆட்சியில், மதுரைக்குள் நுழைய முடியாத ஸ்டாலின், தற்போது அதே மதுரையில், சுதந்திரமாக நடைப்பயிற்சி செய்கிறார். சட்டம் – ஒழுங்கு சரியாக இருப்பதே, இதற்கு காரணம்,” என முதல்வர், இ.பி.எஸ்., பேசினார். திண்டுக்கல் லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர், ஜோதிமுத்து, கரூர், அ.தி.மு.க., வேட்பாளர், தம்பி துரை, நிலக்கோட்டை சட்டசபை தொகுதி வேட்பாளர், தேன்மொழியை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., வேடசந்துார், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநியில் பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது:’டிவி’யில் வந்தது தேர்தல் கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. நான், 2016ல் எடப்பாடியில் போட்டியிட்டேன். கருத்துக்கணிப்பில், வெற்றி பெற மாட்டேன் என்றனர். ஆனால், 42 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.தமிழகத்திற்கு அதை செய்வோம்; இதைச்செய்வோம்…

Read More

இலங்கை அமைச்சர் ஹக்கீமின் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்து: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் கண்டனம்

இலங்கை அமைச்சர் ஹக்கீமின் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்து: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் கண்டனம்

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே, மேற்படி கண்டனத்தை சிறிதரன் பதிவு செய்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ரஊப் ஹக்கீம்; “யுத்த காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்கு, உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தண்டனை வழங்கப்படும் என்பதில், அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும்” எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் பிபிசி தொடர்பு கொண்டு பேசிய போது; “முஸ்லிம் தலைவர்கள்…

Read More

ஐதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு – ஐபிஎல் கிரிக்கெட்

ஐதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு – ஐபிஎல் கிரிக்கெட்

டெல்லியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 16-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணியில் முகமது நபி , சித்தார்த் கவுல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதனையடுத்து ஐதராபாத் அணி 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Read More

48 ஆண்டுக்கு பிறகு கடற்படைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா

48 ஆண்டுக்கு பிறகு கடற்படைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா

48 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படைக்கு இந்தியா ஹெலிகாப்டர்கள் வாங்குகிறது.இந்த நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் அதிநவீன எம்எச் – 60ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு வழங்க உள்ள 24 ஹெலிகாப்டர்களின் விலை ரூ.17,861 கோடி. இந்த ஹெலிகாப்டரில் கண்காணிப்பு சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆயுதங்கள் உள்ளிட்டவை இருக்கும். இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், 24 எம்எச் 60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை இணைப்பதன் மூலம், இந்திய பாதுகாப்பு படையின் வான் தாக்குதல், நீர்மூழ்கிகளுக்கு எதிரான தாக்குதல் திறன் அதிகரிக்கும். அமெரிக்கா- இந்திய உறவை வலுப்படுத்த உதவும் வகையில்,…

Read More

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு, 7500 அமெரிக்க டாலர் அபராதம்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு, 7500 அமெரிக்க டாலர் அபராதம்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு, 7500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. விளையாட்டு நிபந்தனைகளை மீறி, மது போதையில் வாகனத்தை செலுத்தியமை மற்றும் விபத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக திமுத் கருணாரத்னவிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது. கொழும்பு – கிங்சி வீதியில் கடந்த 31ஆம் திகதி திமுத் கருணாரத்னவின் ஜீப் வண்டி, முச்சக்கரவண்டியொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது. இந்த விபத்து நேரும் சந்தர்ப்பத்தில், திமுத் கருணாரத்ன மதுபோதையில் வாகனத்தை செலுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட திமுத் கருணாரத்ன, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். விபத்தில் முச்சக்கரவண்டி…

Read More

திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது

திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை, பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது. இச்சூழலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வீரமணி, ஊர் ஊராக பிரசாரம் செய்து வருகிறார். இதனால், தங்கள் கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளும் விழாமல் போகும் ஆபத்து உள்ளதாக, தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: எங்கள் கட்சி பெயரில், ‘திராவிடம்’ இருந்தாலும், நாங்களும் கடவுள் பக்தி கொண்டவர்கள் தான். மறைந்த கருணாநிதியே, வயதான காலத்திற்கு பின், ‘சென்டிமென்டாக’ மஞ்சள் துண்டை அணிந்து இருந்தார். தற்போதைய தலைவர் ஸ்டாலின், சோளிங்கர் பொதுக்கூட்டத்தில், ‘நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. என்…

Read More

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ஜோ பிடென் (வயது 76). இவர் 1973-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 35 ஆண்டு காலம் செனட் சபை எம்.பி. பதவி வகித்தவர். ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை துணை ஜனாதிபதி பதவி வகித்தார். அடுத்த ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்க பரிசீலித்து வருகிறார். இந்த நிலையில், நெவேடா மாகாண சட்டசபையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (39) என்ற பெண் சமீபத்தில் ஜோ பிடென் மீது பரபரப்பு செக்ஸ் புகார் எழுப்பினார். இது குறித்து அவர் அங்கு…

Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி – மஹிந்த குற்றச்சாட்டு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி – மஹிந்த குற்றச்சாட்டு

இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்களை நிரந்தரமான சாதாரண சட்டமாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியபோது, மஹிந்த ராஜபக்ஷ இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அரசாங்கத்தால் புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது, மிகவும் பாரதூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த சட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்ற அதேவேளை, ஊடக சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துகிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்தால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வரப்படுமானால், தாம் ஆட்சிப்பீடம் ஏறியவுடன், அந்த…

Read More

செக் மோசடி வழக்கு; பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை

செக் மோசடி வழக்கு; பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை

தெலுங்கு திரைப்பட உலகில் பிரபல நடிகராக இருப்பவர் மோகன் பாபு. திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது படநிறுவனத்தின் தயாரிப்பில் சலீம் என்ற தெலுங்கு படம் உருவானது. இதில் மஞ்சு விஷ்ணு, இலியானா டி குரூஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு டிசம்பரில் படம் வெளியானது. இதனை இயக்கியவர் தேவதாசு பட புகழ் இயக்குநர் ஒய்.வி.எஸ். சவுத்ரி. இவருக்கு சேர வேண்டிய சம்பள தொகை ரூ.1.60 கோடிக்கு பதிலாக ரூ.1.10 கோடி பணம் தரப்பட்டு உள்ளது. ரூ.40.50 லட்சம் தொகைக்கு மோகன் பாபு காசோலை தந்துள்ளார். ஆனால்…

Read More
1 3 4 5 6 7 70