தென் ஆப்பிரிக்கா தொடரைக் கண்டு நடுங்கும் பாகிஸ்தான்: கேப்டன் சர்பராஸ் அகமெடின் மெசேஜ்

தென் ஆப்பிரிக்கா தொடரைக் கண்டு நடுங்கும் பாகிஸ்தான்: கேப்டன் சர்பராஸ் அகமெடின் மெசேஜ்

2013-ல் கடைசியாக பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற போது பாகிஸ்தான் 0-3 என்று செம உதை வாங்கியது. அதுவும் முதல் டெஸ்ட் போட்டியில் ஜொஹான்னஸ்பர்கில் பாகிஸ்தான் அதன் மிகக்குறைந்த டெஸ்ட் ஸ்கோரான 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா தொடர் என்றாலே பாகிஸ்தான் வீரர்களுக்கு வயிற்றில் மோட்டார் ஓடுவது எதார்த்தமே. கடந்த 5 தென் ஆப்பிரிக்க தொடர்களில் பாகிஸ்தான் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடர் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தொடராகும் ஏனெனில் 3 டெஸ்ட்கள், 5 ஒருநாள், 3 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடுகிறது. டிசம்பர் 26ம் தேதி பாக்சிங் டே டெஸ்ட் செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது….

Read More

பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்கிய, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து உள்ளது. பொன் மாணிக்கவேல்,பணி நீட்டிப்பு,தடை விதிக்க,சுப்ரீம் கோர்ட் மறுப்பு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்பிரிவை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. இந்த தனிப்பிரிவு, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இந்நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றும் அரசாணைக்கு தடை விதித்தது. மேலும், ஓய்வு பெற்ற, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலின் சிறப்பான பணியை பாராட்டி,…

Read More

இலங்கை பார்லிமென்ட் கலைப்பு செல்லாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இலங்கை பார்லிமென்ட் கலைப்பு செல்லாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இலங்கை பார்லிமென்ட்டை கலைத்தது செல்லாது ; அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரம சிங்கேவின், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர். ரணிலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து, யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி, புதிய பிரதமராக, ராஜபக்சேவை நியமிப்பதாகவும், அதிபர் சிறிசேன அறிவித்தார். ஆனால், ராஜபக்சேவுக்கு போதிய, எம்.பி.,க்கள் பலம் இல்லாததை அடுத்து,…

Read More

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு

இலங்கை நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளமையை நிரூபிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு ஆதரவாக 117 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிக்கும் பொருட்டு 113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால் போதுமானதாகும். ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ளமையினை நிரூபிப்பதற்கான மேற்படி யோசனையினை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்திருந்தார். இதன்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அதன் கூட்டுக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையும் வாக்களித்தன. அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணில் விக்ரமசிங்கவுக்கு…

Read More

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்? ராகுல் காந்தி அறிவிக்கிறார்

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்? ராகுல் காந்தி அறிவிக்கிறார்

பா.ஜனதா ஆட்சி செய்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் கட்சி தேர்தலை எதிர்க்கொண்டது. இப்போது முதல்வர் யார்? என்பது தொடர்பாக முடிவெடுக்கும் பெரும் பொறுப்பு காங்கிரஸ் தலைமையில் கொடுக்கப்பட்டுள்ளது. இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸில் சச்சின் பைலட்டும், மத்திய பிரதேசத்தை பொறுத்தவரையில் ஜோதிராதித்ய சிந்தியாவும் முக்கிய தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களை மாநில தலைமையில் அமரவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. ராஜஸ்தானில் 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை இழப்பதற்கு காரணமே சச்சின் பைலட் மற்றும் முன்னாள் முதல்வர் அசோக் கெலட் இடையிலான மோதல்…

Read More

பிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே

பிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே

பிரதமர் மே-யின் அணியில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி அடைய முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது, அமைச்சரவையின் எல்லா முக்கிய உறுப்பினர்களும் பிரதமர் தெரீசா மே-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 172 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளதாக கணக்கிட்டுள்ளது. ஆனால், இது ரகசிய வாக்கெடுப்பு என்பதால், வெளியில் ஆதரவு தெரிவித்துவிட்டு, தனியாக இன்னொரு விதமாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. பிரதமர் தெரீசா மே-க்கு எதிராக யார் போட்டி போடுவது என்பதில், எதிரணியினர் பிளவுண்டு இருப்பதாக தெரிகிறது, பிரதமரின் இல்லமான 10 டவுனிங் ஸ்டீரிட்டில் இருந்து வெளியான அறிக்கையில், தன்னுடைய முழு பலத்தோடு இந்த போட்டியை எதிர்கொள்ள போவதாக தெரீசா மே…

Read More

ராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு – மத்தியபிரதேசத்தில் இழுபறி

ராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு – மத்தியபிரதேசத்தில் இழுபறி

5 மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி அமோக வெற்றி பெற்றது. மத்தியபிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. சத்தீஷ்கார் சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், மத்தியபிரதேசம், மிசோரம் சட்டசபைகளுக்கு நவம்பர் 28-ந்தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபைகளுக்கு கடந்த 7-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது….

Read More
1 2 3 4 5 6 52