வல்வை விளையாட்டு கழக மோதலில் 7பேர் கைதாகி ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

வல்வை விளையாட்டு கழக மோதலில்  7பேர் கைதாகி ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

வல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்க ளில் இருவர் பிணையில் விடுவிக்க ப்பட்டதுடன் மற்றைய ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டார். கடந்த சனிக் கிழமை வல்வெட்டித்துறை நெடிய காடு மற்றும் ஊறணி பகுதியில் உள்ள இரண்டு விளையாட்டு கழ கங்களிற்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் 13 பேர் காயமடைந்தனர். இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வல்வெட்டித்துறை பொலிஸார் ஏழு சந்தேக நபர்களை கைது செய்து நேற்று ஞாயிற் றுக்கிழமை பருத்தித்துறை நீதவானின் வாச ஸ்தலத்தில் முற்படுத்திய போது இருவரை பிணையில் விடுவித்த நீதவான் நால்வரை எதிர்வரும் 21-ம் திகதி வரையும்,…

Read More

கொக்குவிலில் இளைஞன் மீது வாளால் வெட்டி விட்டு தப்பியோடியவர்களை ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடித்தனர்

கொக்குவிலில் இளைஞன் மீது வாளால் வெட்டி விட்டு தப்பியோடியவர்களை ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடித்தனர்

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் சமூக விரோத கும்பலான வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த நபரொருவர் ஊரவர்களி டம் வசமாகமாட்டியுள்ளார். இதனை அடுத்து ஊர் இளைஞர்கள் குறித்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கொக்குவில் மேற்கு காந்திஜீ பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மதியம் மோட்டார் சைக்கிளில் சென்ற குழு ஒன்று அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை வாளால் வெட்டி தாக்கியுள்ளது. இதன் போது அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு குறித்த கும்பலை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். எனினும் குறித்த குழுவினர் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து வாள்வெட்டு கும்பலை கிரா மத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து துரத்தி ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். பிடிபட்ட இளைஞருக்கு…

Read More

கரணவாய் மத்தியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 20 பவுண் நகை கொள்ளை

கரணவாய் மத்தியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 20  பவுண் நகை கொள்ளை

பட்டப்பகல் வேளை வீடு புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருபது பவுண் நகைகளை திருடிச் சென்று ள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தியொன்று தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை பகல் பத்து மணிக்கும் பதினொரு மணி க்கும் இடைப்பட்ட நேரத்தில் கரணவாய் மத்தி பாடசாலை வீதியில் உள்ள இரத்தினமூர்த்தி சதானந்தமூர்த்தி என்பவரது வீட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவ ருவதாவது. வீட்டில் உள்ளவர்கள்வேலைக்கு சென்றிருந்த நிலையில் வயோதிப மூதாட்டி ஒருவர் வீட்டில் இருந்ததை சாதகமாக பயன்படுத்தி உள்நுழைந்த திருடர்கள் நகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த காப்பு, மோதிரம், சங்கிலி, நெக்கிளஸ் உள்ளிட்ட பதினாறு பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக…

Read More

மீனவ மக்கள் நடத்திய போராட்டத்தில் ஒன்றில் பங்கெடுக்கச் சென்ற மாவை சேனாதிராஜா அந்த மக்களால் வெளியேற்றப்பட்டார்

மீனவ மக்கள் நடத்திய போராட்டத்தில் ஒன்றில் பங்கெடுக்கச் சென்ற மாவை சேனாதிராஜா அந்த மக்களால் வெளியேற்றப்பட்டார்

மீனவ மக்கள் நடத்திய போராட்டம் ஒன்றில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்த மக்களால் வெளியேற்றப்பட்ட சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வெளிமாகாண மீனவர்களை உடனடியாக வெளியேற்ற கோரி கடந்த செவ்வாய்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் முன்னெ டுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல்வாதிகளை போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கூறி வெளியேற்றி யுள்ளனர். அங்கு சென்றிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் ஆகியோரை வெளியேற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீன…

Read More

விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் மரணத்தைத் தழுவினார்

விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட  முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் மரணத்தைத் தழுவினார்

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை துணைப்பொறுப்பா ளர் ஐங்கரன் கடந்த திங்கள் இரவு 11 மணியளவில் மாரடைப் பால் உயிரிழந்துள்ளார். மூதூர் கிழக்கில் பல நூற்றுக்கணக்கான வர்கள் அரச உத்தியோகத்தில் இணைவதற்கும் கல்வியில் அக்கறை செலுத்தவும் காரணமானவராகவும், மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடை முறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் இவர் விளங்கினார். இதேவேளை, ஐங்கரன் ஒரு அரசியல் வாதியின் சேவைக்கு மேல் சென்று தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒரு வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தீவிரமாக இருந்தபோது இரவும் பகலும் மக்களின் பிரச்சனைகளைக்கு செவிமடுத்து சிறந்த செயற்பாட்டாளராக விளங்கியவர் ஐங்கரன் என்றும் தாக்குதல்ளை விடுதலைப்புலிகள் மேற்கொள்கின்றபோது சீருடை தரித்து ஆயுதம்…

Read More

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. டெல்லி அமலாக்கப்பிரிவு கூடுதல் நீதிபதி ரூபி அல்கா குப்தா முன் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையின் பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும், அவர் குற்றம்சாட்டுவோர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. கார்த்தி சிதம்பரம் தவிர்த்து, தனியார் நிறுவனமான அட்வான்ட்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டன்சி நிறுவனம், அதன் இயக்குநர் பத்மா பாஸ்கரரமணா, ரவி விஸ்வநாதன், செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ், அதன் இயக்குநர் அண்ணாமலை பழனியப்பா ஆகியோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் பிரிவு4-ன்கீழ் குற்றப்பத்திரிகை…

Read More

முப்பை தீ விபத்து: நான் பாதுகாப்பாக உள்ளேன், தீயணைப்பு வீரர்களுக்காக பிரார்த்திப்போம் – தீபிகா படுகோனே

முப்பை தீ விபத்து: நான் பாதுகாப்பாக உள்ளேன், தீயணைப்பு வீரர்களுக்காக பிரார்த்திப்போம் – தீபிகா படுகோனே

மராட்டிய மாநிலம் மும்பையின் ஓர்லி பகுதியில் 33 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்தான் இந்தி நடிகை தீபிகா படுகோனே குடியிருக்கிறார். குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வீரர்கள் 10 வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் பிடித்துள்ள தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகிறது.  குடியிருப்பு கட்டடத்தில் இருந்து 90 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர், தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபிகா படுகோனே டுவிட்டரில்…

Read More

”ஹிஜாப் அணிய மாட்டேன்”: இரான் விதிகளை எதிர்த்து இந்திய செஸ் வீராங்கனை விலகல்

”ஹிஜாப் அணிய மாட்டேன்”: இரான் விதிகளை எதிர்த்து இந்திய செஸ் வீராங்கனை விலகல்

இரானில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் (தலைமுடியை மறைக்கும் துணி) அணிய வேண்டும் என்ற விதி தனது தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிராக உள்ளதால், அங்கு நடக்கவுள்ள ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார். ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடர், ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை இரானில் நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள இந்தியாவை சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் தேர்வாகியிருந்தார். உலக ஜூனியர் பெண்கள் பட்டம், பெண்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் உள்பட பல பட்டங்களைப் பெற்ற செளமியா, உலக பெண் செஸ் போட்டியாளர்கள் தர வரிசையில் 97 வது இடத்திலும், இந்திய அளவில்…

Read More

இந்து சமய அமைச்சராக இஸ்லாமியர்: யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து சமய அமைச்சராக இஸ்லாமியர்: யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கையின் இந்து சமய விவகார துணை அமைச்சராக இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரை நியமித்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நல்லூர் கோயிலின் முன்பாக புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை சைவமகா சபையினால் நடத்தப்பட்ட இந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலுக்கு முன்பாக ஒன்று கூடிய அவர்கள், அமைதியான முறையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். செவ்வாய்க்கிழமை சில அமைச்சுக்களின் பொறுப்புகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டு, துணை அமைச்சு பதவிகளும் இலங்கை ஜனாதிபதியால் வழங்கப்பட்டன. இதன்படி, இந்து சமய விவகார…

Read More

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கம்

உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது வரலாற்று சிறப்பு மிக்க முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. காயம் காரணமாக கேப்டன் விராட்கோலி இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம் பெற்று இருந்த விக்கெட்…

Read More
1 2 3 4 5 8