காணாமல்போன விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் படம் வெளியீடு

காணாமல்போன விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் படம் வெளியீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைவர் என்று அடையாளப்படுத்தப்படும் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதி இறுதிகட்டப் போரின்போது முள் வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டு சென்றதை கண்டதாகவும் சாட்சியங்கள் கூறியுள்ளதாக ITJP என்ற சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project) எனும் அமைப்பு கூறியுள்ளது. சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டம் வெளியிட்டுள்ள படம் இளம்பரிதியின் மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண்பிள்ளை ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை கடைசியாக வட்டுவாகல் பகுதியில் கண்டதாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளதாகவும் ITJP குறிப்பிட்டுள்ளது. இவர்கள் 18.05.2009ஆம் திகதி காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களது…

Read More

பள்ளி பாடத்தில் யோகாவை சேர்த்தால் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் – வெங்கையா நாயுடு பேச்சு

பள்ளி பாடத்தில் யோகாவை சேர்த்தால் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் – வெங்கையா நாயுடு பேச்சு

பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மந்திரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், பள்ளி மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கலந்துக்கொண்டு யோகா செய்தார்கள். மும்பை பாந்திராவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று யோகாசனத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் பேசுகையில், நேர்மறையான எண்ணங்களுக்கு யோகா பழக்கம் மிகவும் முக்கியமானதாகும். மாறிவரும் வாழ்க்கை…

Read More

மனைவி எதிர்ப்புக்கு பணிந்த டிரம்ப்

மனைவி எதிர்ப்புக்கு பணிந்த டிரம்ப்

சட்டவிரோதமாக அகதிகளாக வந்தவர்களிடமிருந்து குழந்தைகளை பிரிக்காமல், சேர்த்தே அடைத்து வைக்கும் உத்தரவு ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் அருகில் உள்ள மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, ஏராளமானோர், அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கேயே தங்கி விடுகின்றனர். இதை தடுக்க, அதிபர், டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, சமீபத்தில் கடுமையான விதிகளை அமல்படுத்தியது. அதன்படி, அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவோர், கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதேசமயம், அவர்களுடன் வந்த, அவர்களது குழந்தைகள் தனியாக பிரிக்கப்பட்டு, எல்லையோரம் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டனர். பெற்றோரை பிரிந்து தனியாக இருக்கும் குழந்தைகள் அலறி துடிக்கும் காட்சிகள், ஊடகங்களில் வெளிவந்து, உலகம் முழுவதும்…

Read More

22 வருடங்களுக்குப் பிறகு இணையும் மோகன்லால் – பிரபு

22 வருடங்களுக்குப் பிறகு இணையும் மோகன்லால் – பிரபு

பிரியதர்ஷன் நடிப்பில் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸான படம் ‘காலபனி’. தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் ரிலீஸான இந்தப் படத்தில், மோகன்லால், பிரபு, தபு, அம்ரிஷ் புரி, வினீத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்தார். இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் – பிரபு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், 22 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைகின்றனர். இந்த முறையும் பிரியதர்ஷனே இவர்களை இயக்கப் போகிறார். பிரியதர்ஷனின் கனவுப்படமான ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கப் போகின்றனர். 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி…

Read More

இங்கிலாந்து: ஒருநாள் போட்டியில் மெகா சாதனை

இங்கிலாந்து: ஒருநாள் போட்டியில் மெகா சாதனை

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த 3-வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2016-ம் ஆண்டு இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது இங்கிலாந்து தனக்கு தானே அந்த சாதனையை முறியடித்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜேஷன் ராய், பேர்ட்ஸ்டோவ் அதிரடி…

Read More

கனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- நாடாளுமன்றம் ஒப்புதல்

கனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- நாடாளுமன்றம் ஒப்புதல்

உற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 52-29 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்களை இந்த சட்டம் அளிக்கிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ”நம் குழந்தைகளுக்கு எளிதில் கஞ்சா கிடைக்கிறது. அதேபோல் சமூக குற்றவாளிகள் லாபம் சம்பாதிக்கவும் இது காரணமாக அமைகிறது” என்று தெரிவித்திருந்தார். ”இந்த சட்டத்தின் மூலம் இதற்கு முடிவு கட்டியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார். கனடா…

Read More

காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது

காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது

பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டதால் மெகபூபா நேற்று ராஜினாமா செய்ததை அடுத்து, இன்று காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 87 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 2014-ம் ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் – தேசியமாநாட்டு காங்கிரஸ் கூட்டணி பிரிந்தது, தனித்தனியாக போட்டியிட்டது. தேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை அமைந்தது. 28 தொகுதிகளை பிடித்து மக்கள் ஜனநாயக கட்சி முதலிடம் பிடித்தது. ஆட்சியமைக்க போதிய பலமான 44 உறுப்பினர்கள் எந்த கட்சியிடமும் கிடையாது. மோடி அலை மற்றும் ஆளும்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு காரணமாக ஜம்மு பிராந்தியத்தில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. ஆனால் பாகிஸ்தான்…

Read More

ஒரு நிஜம் நிழலாகிறது – டிராஃபிக் ராமசாமி

ஒரு நிஜம் நிழலாகிறது – டிராஃபிக் ராமசாமி

அநீதியை தட்டி கேட்கும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையில் நடந்தவற்றை வெள்ளித்திரையில் கொண்டு வருவதை நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கும் காணொளி.

Read More

இசை, சினிமா, கச்சேரி போன்றவற்றில் தென்னிந்தியாவுடன் தொடர்பை இழந்துவிட்ட தென் இலங்கை: புதுப்பிக்கும் முயற்சியில் இலங்கை வானொலி தீவிரம்

இசை, சினிமா, கச்சேரி போன்றவற்றில் தென்னிந்தியாவுடன் தொடர்பை இழந்துவிட்ட தென் இலங்கை: புதுப்பிக்கும் முயற்சியில் இலங்கை வானொலி தீவிரம்

இசை, சினிமா, கச்சேரி போன்றவற்றில் தென்னிந்தியாவுடன் தென் இலங்கையானது தனது தொடர்புகளை இழந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அந்த தொடர்பை புதுப்பிக்கும் முயற்சி யில் இலங்கை வானொலி இறங்கியுள்ளது. தென்னிந்தியத் திரைப்படங்களுக்கும், இலங்கைக்கும் முன்பு அதிக அளவில் தொடர்பு இருந்தது. இசை, சினிமா, இசைக் கச்சேரி போன்ற துறையைச் சேர்ந்தவர்கள் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பில் 1950-ம் ஆண்டு முதலே இருந்து வந்தனர். ஆனால் இந்தியா, இலங்கை கூட்டுத் தயாரிப்பில் ஏராளமான தமிழ் படங்களும் தயாரானதும் உண்டு. 1970-களில் நடிகர் சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்த பட்டிக்காடா பட்டணமா என்ற படத்தில் இடம்பெற்ற ‘என்னாடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு’ என்ற பாடல் மிகவும் பிரபலம். இதே பாடலின் டியூனைப் பின்பற்றி சிங்களத்தில்…

Read More

எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி!

எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி!

அசாம் மாநிலம் லாய்புலியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கவுகாத்தியை சேர்ந்த நிதி நிறுவனம் கடந்த மே 19-ம் தேதி ஏடிஎம்மில் ரூ. 29 லட்சத்தை வைத்தது. பணம் வைக்கப்பட்ட மறுநாளே ஏடிஎம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை. ஏடிஎம் வாயில் மூடப்பட்டு இருந்த நிலையில் அதற்கு பின்னால் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் இருந்து உள்ளது. ஏடிஎம் செயல்படாதது தொடர்பாக வங்கி நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து ஜுன் 11-ம் தேதி ஆட்கள் சரிசெய்யும் பணிக்கு சென்றார்கள். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வங்கி ஏடிஎம்மில் இருந்த 2000 மற்றும் 500 ரூபாய்களை எலி ஒன்று கடித்து துண்டு துண்டாக்கியிருந்தது….

Read More
1 2 3 4 10