சேவலும் மயிலும் வாழ்க! திருக்கை வேல் வாழ்க!!

சேவலும் மயிலும் வாழ்க! திருக்கை வேல் வாழ்க!!

கனடா ஸ்காபுறோ நகரில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற “சூரஹம்சாரப் பெருவிழா” அனைவருக்கும் உற்சாகம் தரும் வாணவேடிக்கையும் அன்றைய “சூரஹம்சாரப் பெருவிழா” வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கியது. உள் வீதியிலும் ஆலயத்தின் முகப்பிலும் குளிரின் மத்தியிலும் பக்தர்கள் இந்தப் பக்திப் ” போரை” நடத்தி பெரும் நிறைவு கொண்டனர். ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தலைமையிலும் சிவஶ்ரீ சோமஸ்கந்தக் குருக்கள் வழிகாட்டலிலும் அதிகளவு உதவிக் குருமார்கள் இ ந்த பக்திப் போருக்கு உயிர் கொடுத்தனர். வர்த்தகப் பெருமகன் திரு குலா செல்லத்துரை தம்பதி இந்த திருவிழாவின் முக்கிய உபயகாரராக விளங்கினார்கள்

Read More

இதயமுள்ளவர்கள் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது

இதயமுள்ளவர்கள் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது

கனடா தேசம் உலக நாடுகள் சிலவற்றைப் போல இதயமுள்ள நாடு. தன்னால் இயன்றளவிற்கு உலகெங்கும் இருந்து உயிராபத்திலிருந்து  தப்பும் வகையில் அகதிக் கோரிக்கையை சமர்ப்பிக்கின்றபோது, அவற்றை ஏற்றுக்கொண்டு, இலட்சக்கணக்கான உலக மக்களுக்கு வாழ்வளித்த நாடு இந்த கனடா தான். இவ்வாறானவர்களில் எமது தாயகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பல இதயமுள்ளவர்கள் கடந்த வாரத்தில் “நிவாரணம்” மூலம் நன்கு அறியபபட்டவரும் மனித நேயம் எங்கே தேவைப்படுகின்றதோ, அந்த இடத்திற்கு ஓடிச்செல்லாவிட்டாலும் தனது இதயத்தை அங்கு அனுப்பிவை த்து ஆதரவு வழங்குபவருமான அன்பரும் நண்பருமான திரு செந்தில் குமரன் தலைமையிலே கனடாவில் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது. கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை இந்த…

Read More

இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் – மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் – மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றும் கூச்சல் ஏற்பட்டது. எம்.பிக்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்தார். சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூச்சல் குழப்பம் நீடித்தது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும கத்தியுடன் திரிந்ததாக காட்டும் படங்கள் வெளியாயின. இத்தகைய படங்களுடன் ரிவிர என்ற இணைய தளம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குக் கூடிய போது, பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியினர் பக்கம் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். சபையை சபாநாயகர் ஆரம்பித்தபோது, மகிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த தினேஸ்…

Read More

சபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்

சபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 – 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தரிசனம் செய்வதற்கு அனுமதியில்லை என்ற ஐ தீகம் பல நுாற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்’ என, சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, ஐப்பசி மாத பூஜையின் போது, சில இளம் பெண்கள், சபரிமலைக்கு வந்தனர். பக்தர்களின் போராட்டத்தால், அவர்கள் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, 50க்கும் மேற்பட்ட மறுசீராய்வு மனுக்களை,…

Read More

325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்

325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்

காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் ரூ. 1200 கோடி செலவில் காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க அம்மாநில கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.இச்சிலை வளாகத்தில் அருங்காட்சியகம் 360 அடி உயர கண்ணாடி கோபுரம் கட்டவும் இதன் வழியாக கிருஷ்ணராஜசாகர் அணையின் முழுதோற்றத்தை பார்வையிடும் வகையில்கட்டவும் திட்டமிட்டுள்ளது. தனியார் பொது அமைப்பின் பங்களி்ப்பை எதிர்பார்த்து கர்நாடக அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும்,இதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

Read More

பா.ஜ., ஆபத்தான கட்சியா? : அமைச்சர் ஜெயகுமார் பதில்

பா.ஜ., ஆபத்தான கட்சியா? : அமைச்சர் ஜெயகுமார் பதில்

”மத்தியில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாங்கள், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் செயல்படுகிறோம்,” என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.சென்னை மாநராட்சியில், இயற்கை பேரிடர் காலங்களில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, 4.86 கோடி மதிப்பீட்டில், 336 நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று நடந்தது.இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், பேரிடர் காலங்களில், சாலையில் விழும் மரங்களை, உடனுக்குடன் அகற்ற, 171 மரம் வெட்டும் இயந்திரங்கள் உள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்ற, அதிக திறன் கொண்ட, 17 மோட்டர் பம்புகள் உள்ளன.தற்போது கூடுதலாக, 200 மரம்…

Read More

பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது

பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது

‘பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும், அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது’ என, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கே உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், அதிபர் மைத்ரிபால சிறிசேன, சமீபத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை, புதிய பிரதமராகவும் அவர் அறிவித்தார்.இதனால், அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, நவ., 5ல் நடப்பதாக இருந்த, பார்லிமென்ட் கூட்டத் தொடரை, நவ., 14ம் தேதிக்கு, சிறிசேன ஒத்தி வைத்தார். ஆனால், தான் பிரதமராக தொடர்வதாக, ரணில் கூறி வந்தார்.இந்நிலையில், பார்லிமென்டை கலைப்பதாகவும், அடுத்தாண்டு, ஜனவரி, 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், சிறிசேன, சமீபத்தில்…

Read More

ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்

ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்

இலங்கை பார்லியில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்ததை அடுத்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார் கடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை பார்லிமென்ட் இன்று கூடியது. அப்போது அதிபர் சிறிசேனாவால் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து கூச்சல், குழப்பம் நிலவியது. ரணில் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவாக…

Read More

மகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா?

மகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா?

ஆறாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரோடு சேர்த்து நடத்தப்பட்ட மகளிர் உலகக் கோப்பை தொடர் முதல்முறையாக தனியாக மேற்கிந்தியத் தீவுகளில் நடத்தப்படுகிறது. கயானா நகரில் இன்று தொடங்கும் போட்டியில் ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி, நியூஸிலாந்து அணியை எதிர்த்து இன்று விளையாடுகிறது. 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய…

Read More

காமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்

காமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்

லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களை உருவாக்கிய ஸ்டேன் லீ உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 95. காமிக்ஸ் உலகின் பிதாமகர் என்று வர்ணிக்கப்பட்ட இவர் உருவாக்கிய, ஹல்க், ஸ்பைடர் மேன், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் உலக அளவில்  மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.  இளம் வாசகர்களை கவரும் வகையில் ஸ்டேன் லீயின் கதைகள் இருந்தது.

Read More
1 13 14 15 16 17 56