துனிசியா நாட்டில் நடுக்கடலில் படகு உடைந்து 70 அகதிகள் பலி

துனிசியா நாட்டில் நடுக்கடலில் படகு உடைந்து 70 அகதிகள் பலி

துனிசியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக கடல்வழியாக ஒரு படகில் ஏராளமானோர் சென்றனர். துனிசியாவின் எஸ்பேக்ஸ் மாகாணத்தில் இருந்து 40 மைல் தூரத்தில் நடுக்கடலில் சென்றபோது திடீரென அந்த படகு உடைந்து கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் சென்ற அகதிகள் அனைவரும் கடலில் விழுந்தனர். அந்த வழியாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 16 பேரை மீட்டனர். இருப்பினும் கடலில் மூழ்கி 70 பேர் பலியானார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

சீன பொருட்களுக்கு வரி உயர்வு செய்தது அமெரிக்கா

சீன பொருட்களுக்கு வரி உயர்வு செய்தது அமெரிக்கா

இதற்கு பதிலடி தரப்படும் என, சீனா தெரிவித்துள்ளால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்து, வரியை குறைப்பதாக சீனா உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘சீனா உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாததால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும், 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு, 10ம் தேதி வரி உயர்த்தப்படும்’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று, சீன துணை அதிபர், லியு ஹீ தலைமையிலான குழு, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, ராபர்ட் லைட்திசர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசியது. இரவு வரை…

Read More

தேவராட்டம் – சினிமா விமர்சனம்

தேவராட்டம் – சினிமா விமர்சனம்

`கொம்பன்’, ‘குட்டிப்புலி’, `மருது’, `கொடிவீரன்’ படங்களுக்கு அடுத்து முத்தைய்யா இயக்கியிருக்கும் படம் தேவராட்டம். அவரது முந்தைய படங்களின் வரிசையை வைத்து இந்தப் படத்தின் பின்னணியை ஒருவாறாக யூகித்துக்கொள்ள முடியும். மதுரை மாவட்டத்தில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வெற்றியை (கௌதம் கார்த்தி) அவரது சகோதரிகள் வளர்த்து, படிக்கவைக்கிறார்கள். வழக்கறிஞர் ஆகிறார் வெற்றி. அதே மாவட்டத்தைச் சேர்ந்த கொடும்பாவி கணேசன் (ஃபெப்சி விஜயன்) தன்னை எதிர்ப்பவர்களை கொன்று குவிக்கும் நபர். கணேசனின் மகன் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு பெண் விவகாரத்தில் தலையிட நேர்ந்தபோது, கணேசனின் மகனை வெற்றி கொலைசெய்துவிடுகிறான். அதற்கு பழிவாங்கத் துடிக்கும் கணேசன், வெற்றியின் சகோதரியையும் (வினோதினி) அவரது கணவரையும் (போஸ் வெங்கட்) கொன்றுவிடுகிறான். பிறகு என்ன…

Read More

தூக்கத்தில் இருந்த காதலியை கற்பழித்த வாலிபர் சிக்கினார்

தூக்கத்தில் இருந்த காதலியை கற்பழித்த வாலிபர் சிக்கினார்

இங்கிலாந்து நாட்டின் நியூகேசில் நகரை சேர்ந்த இளம்பெண் ஜேட் பெய்லி ரீக்ஸ் (வயது 21). இவரது அண்டை வீட்டில் வசித்து வந்தவர் டேவிஸ் பேட்டன் (வயது 23) பல்கலை கழகத்தில் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் உடல்நல குறைவு ஏற்பட்ட ஜேட் தனது வீட்டில் உள்ள அறையொன்றில் படுத்து தூங்கியுள்ளார். அங்கு வந்த பேட்டன் அவரது அனுமதியின்றி ஜேடை கற்பழித்து விட்டார். தூங்கியெழுந்த ஜேட் தனது ஆடைகள் களையப்பட்டு இருந்தது அறிந்து அதிர்ந்துள்ளார். இதன்பின் பேட்டனிடம் பேசியதில் அவர் கற்பழிப்பில் ஈடுபட்டது ஜேடுக்கு தெரியவந்தது. ஆனால் அவர்கள் இருவரும் பேசிய தகவல்களை ஜேடின்…

Read More

தமிழகம் முழுவதும் மழை

தமிழகம் முழுவதும் மழை

மதுரை, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பெரும்பாலான இடங்களில், 38 டிகிரி செல்ஷியஸ் முதல், 44 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகிறது. தமிழகத்தில் இன்று(மே 9) 14 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது. அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த அனல் காற்றுக்கு நடுவே, சில பகுதிகளில், கோடை மழையும் கொட்டுகிறது. இன்று பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலை நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், மண்மலை, நாச்சிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது….

Read More

புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு – இரா.சம்பந்தன்

புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு – இரா.சம்பந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோள்களுடன் போராட்டங்களை நடத்தியதாக சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரையும் தொடர்புப்படுத்துவதை, எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். கேள்வி :- இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு…

Read More

இலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள்

இலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் பணக்கார குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மகாவேலா கார்டன்ஸ் பகுதியில் 3 அடுக்கு மாடி வீடு ஒன்றில் வசித்து வந்த இவர்களில் இன்ஷாப் இப்ராஹிம் (33) என்பவர் காப்பர் ஆலை உரிமையாளராக உள்ளார். மசாலா பொருட்கள் உற்பத்தி ஆலையின் உரிமையாளரான இவரது சகோதரர் இப்ராஹிம், தாக்குதல் நடத்தப்பட்ட சொகுசு ஓட்டல் ஒன்றில் வெடிகுண்டுகளை வைத்து சென்றது தெரிய வந்தது. இதனை அறிந்து போலீசார் அவரை தேடிச் சென்ற போது, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர், இப்பகுதியில் இவர்களின் குடும்பம் செல்வாக்கு…

Read More

வாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு

வாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று ( 25 ம் தேதி ) மெகா பேரணி நடந்தது. நாளை (26 ம் தேதி ) வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை வாரணாசி வந்தார். தொடர்ந்து ஆதரவாளர்களுடன் மோடி 6 கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்றார். 5 லட்ச தீபம் 2வது முறை போட்டியிடும் பிரதமர் வருகையை முன்னிட்டு இங்குள்ள கோயில்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் அலங்கார சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 5 லட்சம் தீபம் ஏற்றப்பட்டது.பனராஸ் இந்து பல்கலை., வளாகம் லங்கா கேட் அருகே இருந்து பேரணி துவங்கியது. பேரணியில் பா.ஜ.,…

Read More

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – ”ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்” – ருவன் விஜயவர்த்தனே

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – ”ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்” – ருவன் விஜயவர்த்தனே

”இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார். ”அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார். ”தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்” என்றும் ருவன் தெரிவித்துள்ளார். ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான…

Read More

தாயை பிரிந்தது ஏன்? மோடி விளக்கம்

தாயை பிரிந்தது ஏன்? மோடி விளக்கம்

பிரதமர் மோடி, தான் தனது தாயுடன் வசிக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகர் அக்சய் குமாருக்கு கலந்துரையாடல் வடிவில் அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்றுபட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மோடி, தனது தாய் குறித்தும், தான் தனது தாயுடன் வசிக்காததற்கான காரணம் குறித்தும் தெரிவித்துள்ளார். அதில் அவர், மிக இளம் வயதிலேயே நான் என் தாயை பிரிந்து வந்து விட்டேன். சிறு வயதிலேயே அனைத்து பற்றுகளில் இருந்தும் விடுபட்டேன். அனைத்து பந்தங்களும் மாயை என்பது தான் நான் எனது பயிற்சியில் கற்றுக் கொண்டது. அதனை அனைத்து பந்தங்களில் இருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன். அந்த வயதில் நான் வீட்டை விட்டு வெளியேறிய போது துன்பமாக…

Read More
1 2 3 70