ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வுகள் கோரி மும்பை ஐகோர்ட்டில் ஆர்யன் கான் முறையீடு

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி, கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
இந்த வழக்கில்,  25 நாட்களுக்குப் பிறகு  ஆர்யன் கானுக்கு  மும்பை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வாரந்தோறும் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது மும்பை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும்.
இந்த நிலையில்,  வாரந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, போதைப்பொருள் வழக்கு விசாரணை, டெல்லி என்.சி.பி பிரிவின் சிறப்பு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, மும்பை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தலாம்” எனவும் கூறப்பட்டுள்ளது.