தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று  புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 523 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.   அதில் 1,562  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 26  லட்சத்து 33 ஆயிரத்து 164  பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் இன்று கொரோனாவுக்கு  20 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 961  பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
 கொரோனா பாதிப்பில் இருந்து  1,684  பேர் இன்று  ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரையில் 25 லட்சத்து 66 ஆயிரத்து 504  பேர் குணம் அடைந்து உள்ளனர்.   சிகிச்சையில் 16 ஆயிரத்து 478 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று இன்று சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.