நாடாளுமன்றத்தில் அமளி: மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் இடைநீக்கம்

பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள் பயன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் வேளையில், மாநிலங்களவையில் விதிகளை மீறி அவையின் மையப்பகுதிக்கு வந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி 6 உறுப்பினர்களை இன்று நாள் முழுவதுமாக இடைநீக்கம் செய்திருக்கிறார் மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு.

டோலா சென், நடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், ஷாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மெளசம் நூர் ஆகிய இந்த ஆறு உறுப்பினர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.