காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இன்று கூண்டோடு பா.ஜ.,வில் ஐக்கியம்!! தலைமை அதிர்ச்சி

காங்கிரஸ் தலைவர் கோவிந்தாஸ் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு பா.ஜ.வில் சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியில் இருக்கிறது. இதனால் ஆட்சியை தக்க வைப்பதில் பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல், காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப்பில் ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. இதனால், மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா நியமனம் செய்தார்.

இந்நிலையில், 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2017-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும் பா.ஜ., 21 இடங்களிலும் வென்றது. அதிக இடங்களில் வென்ற காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. ஆனால், மாநில கட்சிகளான என்.பி.எப், என்.பி.பி. ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது. இதன்பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து பா.ஜ.,வில் இணைந்தனர்.

தற்போது மணிப்பூர் சட்டசபையில் பா.ஜ.,வுக்கு 25 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். இதனிடையே அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தாஸ் தமது பதவியை இன்று (ஜூலை 20) ராஜினாமா செய்தார். அத்துடன் மேலும் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இன்று கூண்டோடு பா.ஜ.,வில் ஐக்கியமாக உள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியில்