82 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி: தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு முதல்முறையாக தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கிவைத் தார். ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை கடந்த 1934-ம் ஆகஸ்ட் 21-ம் தேதி கட்டப்பட்டது. அணை கட்டி முடிக்கப்பட்டு 82 ஆண்டு களுக்கு மேல் ஆகிவிட்ட நிலை யில், இதுவரை அணையில் தூர் வாரப்படவில்லை. இந்நிலையில், மேட்டூர் அணையில் மூலக்காடு நீர்பரப்புப் பகுதியில் தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
அணையின் வலது கரைப் பகுதியில் உள்ள மூலக்காடு, கொளத்தூர், பண்ணவாடி, இடது கரைப் பகுதியில் உள்ள கூணான் டியூர் மற்றும் கோனூர் (மேற்கு) ஆகிய கிராமங்களிலும் தூர்வாரப் படுகிறது. இதில் முதல்கட்டமாக, ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் கட்டண மின்றி எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
16 லட்சம் ஏக்கர் பாசனம்
தூர்வாரும் பணியைத் தொடங்கிவைத்த பின்னர் செய்தி யாளர்களிடம் முதல்வர் கே.பழனி சாமி கூறியதாவது:
மேட்டூர் அணையில் 120 அடி உயரத்துக்கு நீரை தேக்கிவைக்க முடியும். அணையின் நீர் கொள் ளளவு 93.470 டிஎம்சி. நீர் தேங்கும் பரப்பு 59.25 சதுர மைல் ஆகும். மேட்டூர் அணையில் இருக்கும் நீரைப் பயன்படுத்தி 12 மாவட்டங் களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக் கப்படுகிறது.
மேட்டூர் அணை வரலாற்றில் தற்போதுதான் முதல்முறையாக தூர்வாரப்படுகிறது. அணையின் பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும். விவ சாயிகள் கிராம நிர்வாக அலு வலகத்தில் விண்ணப்பித்து, அதை வேளாண் துறை அதிகாரிகளிடம் காண்பித்தால் தேவையான மண்ணை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
10 சதவீதம் கூடுதல் நீர்
மற்ற அணைகளிலும் தூர் வாரும் பணி நடைபெறும். மழைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. எனவே, தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெறும். ஓர் ஆண்டில் பணி முடியவில்லை என்றால்கூட அடுத்த ஆண்டும் தூர் வாரும் பணி தொடரும். தூர்வாரு வதன் மூலம் அணையில் குறைந்தபட்சம் 10 சதவீதம் கூடுதலாக நீரை தேக்க முடியும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்த சாதனையை விளக்கும் வகையில் அணை பூங்கா முகப்பில் ரூ.1 கோடி மதிப்பில் கல்வெட்டு பதித்து புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆளுநர் நிராகரிக்கவில்லை
தமிழக அரசு அளித்த துணை வேந்தர் பட்டியலை ஆளுநர் நிராகரிக்கவில்லை. சிறப்பானவர் களை தேர்வுசெய்ய வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அரசும் சிறப்பானவர்களை தேர்வுசெய்ய எண்ணுகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், சரோஜா, அரசின் முதன்மைச் செயலர்கள் ஷிவ் தாஸ் மீனா, பிரபாகர், சத்ய கோபால், மாவட்ட ஆட்சியர் சம்பத் மற்றும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.