7.5 சதவீத பொருளாதார வளர்ச்சி: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு

‘நாட்டின் பொருளாதாரம், இந்த ஆண்டு, 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும்,” என, பிரதமர் மோடி தெரிவித்தார்.’பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த அமைப்பின் 14வது மாநாடு, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் தலைமையில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு, சீன அதிபர்ஜிங்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக பிரிவு மாநாடு, வீடியோ கான்பரன்ஸ் வழியாக நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:வேகமான பொருளாதார வளர்ச்சியுள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவால் பல நாடுகளும் பொருளாதார சரிவை சந்தித்தன. இந்தியாவில் இதை சமாளிக்க, சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என மூன்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

நாட்டின் அனைத்துதுறைகளும் மாற்றங்களை சந்தித்து வருகின்றன. புதிய இந்தியா உருவாகி வருகிறது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.