60 சதவீத பேருக்கு கொரோனா பரப்பிய பெண் – தென் கொரியாவில் அதிர்ச்சி

தென் கொரியாவில் 60 சதவீதம் பேருக்கு ஒரு பெண்ணால் மட்டும் கொரோனா பரவி உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஆழ்த்தியுள்ள கொரோனா சமீப காலமாக படு வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் மூன்றரை லட்சத்திற்கும் மேலாக பரவியுள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேல் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.

இந்த நோய் பரவல் மிக வேகமாக இருக்கும் என்பதால் அனைத்து நாடுகளும் எமர்ஜென்ஸி நிலை போல் கண்காணித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர் எங்கு சென்றார், யாரிடம் எல்லாம் பேசினார். யாருடன் தங்கினார் என்ற தகவலின்படி சுகாதார துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்கொரியாவில் மொத்தம் 8 ஆயிரத்து 961 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 111 பேர் இறந்தனர். தற்போது 3 ஆயிரத்து 166 பேர் மீண்டுள்ளனர். தொடர்ந்து பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரு பெண் பாதிக்கப்பட்டதும் பின்னர் அவரது மூலம் 60 சதவீதத்தினர் இந்த பெண்ணால் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இந்த பெண்ணுக்கு கொரோனா தாக்கம் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் சர்ச், நடன விடுதி மற்றும் பல்வேறு ஓட்டல்கள், ஷாப்பிங் என சென்றுள்ளார். இந்த இடங்களில் எல்லாம் அவர் கொரானாவை பரப்பி உள்ளார். இவர் மட்டும் இந்த நாட்டில் 60 சதவீத தொற்றை பரப்பி உள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

ஆனால் அவருக்கு கொரோனா இருந்தது தெரியாமல் நீண்ட நாள் இருந்துள்ளது. அறியாமல் அவர் இந்த வைரசை பரப்பியது தான் பெரும் கவலையான விஷயம்.