6 வயது சிறுமி கொலை – சம்பூர் பகுதியில் சம்பவம்

சம்பூர் – நீலாங்கேணி பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் ஒருவனை சந்தேகிக்கும் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் வெளிநாட்டில் தொழில்புரிவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.