- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
- பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!
- கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!

6-வது நாளாக சிறையில் உண்ணாவிரதம்: முருகன் உடல்நிலை பாதிப்பு: மருத்துவக் குழுவினர் தகவல்
வேலூர் சிறையில் நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட முருகனின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், வேலூர் மத்திய சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு மேல் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் சிறையிலேயே ‘ஜீவசமாதி’ அடைய, கடந்த 18-ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
3 வேளை நீரை மட்டும் பருகி, மவுனவிரதம் மேற்கொண்டுள்ளார். 6-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முருகனின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
முருகனுக்கு கட்டாயமாக உணவு கொடுப்பது, சிகிச்சைகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.