50 சதவீத சிறுவர்கள் தடுப்பூசி போட்டனர்: இளைய தலைமுறை வழி காட்டுகிறது மோடி பெருமிதம்

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதம்பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.இதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும்வகையில், பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-இளைய தலைமுறை வழி காட்டுகிறது. இது ஊக்கம் அளிக்கும் செய்தி. இதே உத்வேகத்தை கடைபிடிப்போம். தடுப்பூசி செலுத்துவதும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதும் முக்கியம். நாம் ஒன்றாக இந்த தொற்றை எதிர்த்து போராடுவோம்.