4 வாரங்களுக்குப் பிறகு ஜெயலலிதா எழுந்து உட்கார்ந்தார்: நலமாக இருப்பதாக தகவல்- முதல்வருக்கு வழங்கப்படும் மருந்து அளவில் மாற்றம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் மருந்து அளவில் மாற்றம் செய்ததால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களாக படுக்கையில் இருந்த முதல்வர்,எழுந்து உட்கார்ந்து முழு நினைவோடு இருப்பதுடன்,சைகை மூலமாகவும் பேசி வருகிறார். இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லண்டன் சிறப்பு மருத்துவர் ஜான் ரிச்சர்டு பீலே மற்றும் எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் கில்நானி,அஞ்சன் டிரிக்கா,நிதீஷ் நாயக் ஆகியோரும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முதல்வருக்கு அப்போலோ மருத்துவ நிபுணர்கள் குழு அளித்து வரும் சிகிச்சையை தொடர்வதற்கு அவர்கள் அனுமதித்தனர்.

தற்போது சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு பெண் மருத்துவர் கள் அப்போலோ மருத்துவமனை பிசியோதெரபி நிபுணர்களுடன் சேர்ந்து முதல்வருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

லண்டன் மருத்துவர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் புறப்பட் டுச் சென்றுவிட்டனர். இந்நிலை யில்,முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவரும் அப் போலோ மருத்துவ நிபுணர்கள் குழுவினர்,முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள்,வழங்கப்படும் மருந்துகள் ஆகிய வற்றை கூர்மையாக ஆய்வு செய்து முதல்வருக்கு அளிக்கப் படும் மருந்து அளவில் மாற்றம் செய்தனர். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

முதல்வருக்கு அளிக்கப்படும் மருந்து அளவை மாற்றிக் கொடுத்த தால்,அவரது இதய வால்வில் இருந்த நோய்த் தொற்று குணமாகி விட்டது. அதாவது இதய வால்வில் நோய்த் தொற்று இருந்தால்,நுரையீரலில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படும். அதுதான் முதல்வருக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. தற்போது மருந்து அளவை மாற்றிக் கொடுத்ததால் இதய வால்வில் இருந்த நோய்த் தொற்று குணமானதுடன்,நுரையீரலில் நீர் தேங்குவதும் நின்றுவிட்டது.

இதன் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து நான்கு வாரம் படுக் கையில் இருந்த முதல்வர்,இப் பொழுது எழுந்து உட்கார்ந்துள் ளார். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இப்போது,மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை.

அதனால் பகல் முழுவதும் முழு நினைவுடன் முதல்வர் இருந்து வருகிறார்.

தொண்டைப் பகுதியில் சிறிய துளையிட்டு குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. அந்த குழாய் இருப்பதால் முதல்வரால் பேச முடியவில்லை. அதனால்தான் அவர் பேச முடியவில்லையே தவிர,வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. குழாய் அகற்றப்பட்டபின் அவரால் பேச முடியும். முதல்வரால் இப்போது பேச முடியாவிட்டாலும் மருத்துவர்கள்,செவிலியர்களிடம் சைகையில் பேசுகிறார். சைகை மூலமாக மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அப்போலோ தகவல்

அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் துறை இயக்கு நர் டாக்டர் என்.சத்தியபாமா நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் வெப்ப நிலை,நாடித் துடிப்பு,இதயத் துடிப்பு,ரத்த அழுத்தம் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாச உதவியுடன்,பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு குழுவினர்,மூத்த இதய சிகிச்சை நிபுணர்கள்,மூத்த சுவாச சிகிச்சை நிபுணர்கள்,மூத்த தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள்,நாளமில்லா சுரப்பி மற்றும் சர்க்கரைநோய் நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஊட்டச்சத்து உணவுகள் வழங்கு வது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர். தற்போது முதல்வர் புரிந்து கொண்டு செயல்படு கிறார். அவரது உடல்நிலையில் சீராக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

சுவாசிக்க டிராகோடமி கருவி இணைப்பு

முதல்வர் ஜெயலலிதா சுவாசிப்பதற்கு வசதியாக தொண்டை பகுதியில் ஒரு துளையிட்டு டியூப் வடிவிலான கருவி (டிராகோடமி) சுவாசக் குழாயில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்வர் சுவாசித்து வருகிறார்.

இந்த டிராகோடமி கருவியின் செயல்பாடு பற்றி அரசு மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை டாக்டர்கள் கூறுகையில்,‘‘மூச்சுத் திணறல்,நுரையீரல் பாதிக்கப்பட்டவருக்கு தொண்டை பகுதியில் துளையிட்டு சுவாசக் குழாயில் டிராகோடமி கருவி பொருத்தப்படும். இந்த கருவியின் மூலம் செயற்கையாக ஆக்ஸிஜன் செலுத்தப்படுவதால்,எளிதாக சுவாசிக்க முடியும். செயற்கையான ஆக்ஸிஜன் இல்லாமலும்,இயற்கையாகவும் சுவாசிக்க முடியும். சுவாசக் குழாயில் கருவி பொருத்தப்பட்டுள்ளதால்,உணவுக் குழாய்க்கு எந்த பாதிப்பும் இல்லை. வாய் வழியாக உணவு உட்கொள்ள முடியும். ஆனால் பேசுவது சிரமம். கருவியை எடுத்தப் பிறகுதான் முழுமையாக பேச முடியும். சிறிய அளவிலான வேலைகளை செய்யலாம்’’ என்றனர்.