- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

24 வருட உறைநிலை கருவை கொண்டு பெண் குழந்தை பெற்றெடுத்த அமெரிக்க இளம்பெண்
அமெரிக்காவின் டென்னசி பகுதியில் வசித்து வருபவர் டினா கிப்சன் (வயது 26). இவரது கணவர் பெஞ்சமின் கிப்சன். இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் 25ந்தேதி எம்மா ரென் என்ற பெண் குழந்தை பிறந்தது. எம்மா ரென் பிறந்த பின் 6 பவுண்டுகள் எடையுடன் 20 இஞ்ச் நீளமுடன் இருந்துள்ளது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், எம்மா ரென் பிறப்பதற்கு 24 வருடங்களுக்கு முன் அதன் கரு உருவாகியுள்ளது.
அதன்பின்னர் அது நீண்ட காலம் உறை நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
இதுபற்றி தேசிய கரு தான மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 1992ம் ஆண்டு முதல் எம்மாவின் கரு பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், உறை நிலையிலான கரு இந்த வருட தொடக்கத்தில் டினாவின் கரு குழாய்க்குள் செலுத்தப்பட்டது. இதனால் டினா பிறந்து 18 மாதங்களுக்கு பின்னர் உருவான கருவை அவர் சுமந்துள்ளார் என தெரிவித்துள்ளது.
அதன் இயக்குநர் ஜெப்ரி கென்னன் கூறும்பொழுது, எம்மாவின் இந்த கதையானது, தேவையான குடும்பத்தினருக்கு கருவை நன்கொடையாக அளிக்க பலர் முன்வருவதற்கு ஊக்கம் தரும் வகையில் அமையும் என கூறியுள்ளார்.