ஆட்டோ டிரைவர் டூ முதல்வர் : யார்? இந்த ஏக்நாத் ஷிண்டே

ஆட்டோ டிரைவர் டூ முதல்வர் : யார்? இந்த ஏக்நாத் ஷிண்டே

மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, 1964ல் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். மும்பையின் தானேவில் அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். பிளஸ் 1 வகுப்பு வரை படித்த ஷிண்டேவால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. குடும்பத்துக்கு உதவும் வகையில் ஆட்டோ ஓட்டத் துவங்கினார். ஆட்டோ டிரைவராக இருந்த ஷிண்டேவுக்கு, ௧௯௮௦களில் தானே மாவட்ட சிவசேனா தலைவராக இருந்த ஆனந்த் திகேவின் தொடர்பு கிடைத்தது. இதையடுத்து, அவர் சிவசேனாவில் சேர்ந்தார். திகேவின் சீடர் என்பதால், கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கிடைத்தது. கடந்த 1997ல் முதல் முதலாக, தானே மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரானார். பின், 2004 முதல், தானேவில் உள்ள கோப்ரி – பக்பகாடி தொகுதி…

Read More

மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டிய ஜோபைடன் : வைரலாகும் வீடியோ

மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டிய ஜோபைடன் : வைரலாகும் வீடியோ

மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் உச்சி மாநாடு துவங்கியது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றடைந்தார். அங்கு உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். இதில்கனடா பிரதமர் ஸ்டின் ட்ரூடேவிடம் மோடி பேசிகொண்டிருந்தார். அப்போது பின்புறமாக வந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், மோடிபின் இடது தோள்பட்டையை லேசாக தட்டினார். சட்டென திரும்பி பார்த்த மோடி உடனே பைடனை அழைத்து கை குலுக்கி தனது அன்பை வெளிப்படுத்தினார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

செலவை குறைக்க 300 பேர் வேலையை காலி செய்த நெட்பிளிக்ஸ்

செலவை குறைக்க 300 பேர் வேலையை காலி செய்த நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் குறைந்து வருவதால், அதன் வருமானம் குறைவதாக கூறி 300 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. உலகின் முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ், பல பிரபலமான திரைப்படங்கள், தொடர்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக அமேசான், வால்ட்டிஸ்னி போன்ற பல நிறுவனங்களும் இருந்துவருவதால், சந்தையில் தன்னை நிலைநிறுத்துக்கொள்ள நெட்பிளிக்ஸ் தடுமாறுகிறது. இதனால் சமீபகாலமாக சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் என்ன செய்வது என்று யோசித்து வந்தது. அந்நிறுவனத்தின் வருமானமும் குறைந்து வந்தது. இதன் காரணமாக கடந்த மே மாதம் 150 பேரை பணியில் இருந்து நீக்கிய நெட்பிளிக்ஸ், இப்போது மேலும் 300 பேரை நீக்கியுள்ளது. இது பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது….

Read More

ஒற்றைக்காலில் நின்றால் நீண்ட காலம் வாழலாம்?

ஒற்றைக்காலில் நின்றால் நீண்ட காலம் வாழலாம்?

ரியோடிஜெனீரோ :ஒற்றைக் காலில் குறைந்தபட்சம், 10 வினாடிகள் நிற்கத் திணறும் 50 வயதினருக்கு, 10 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஸ்போர்ட்ஸ் மெடிசன்’ என்ற பத்திரிகை உடல் நலம் சார்ந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பிரேசிலில், 50 வயதினரின் உடல் திடகாத்திரம் குறித்து, 1,702 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதை, பிரேசில், அமெரிக்கா, பின்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டனைச் சேர்ந்த அறிஞர்கள் மேற்கொண்டனர்.இதில் பங்கேற்றவர்களிடம், கைகளை மேலே துாக்கி, ஒரு காலை மடக்கி இடது கால்முட்டியில் வைத்து, 10 வினாடிகள் நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. மூன்று முறை அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதில் ஐந்தில் ஒருவர் நிற்க முடியாமல் போனது தெரியவந்தது.இத்தகையோர்…

Read More

7.5 சதவீத பொருளாதார வளர்ச்சி: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு

7.5 சதவீத பொருளாதார வளர்ச்சி: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு

‘நாட்டின் பொருளாதாரம், இந்த ஆண்டு, 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும்,” என, பிரதமர் மோடி தெரிவித்தார்.’பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் 14வது மாநாடு, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் தலைமையில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு, சீன அதிபர்ஜிங்பிங் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக பிரிவு மாநாடு, வீடியோ கான்பரன்ஸ் வழியாக நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:வேகமான பொருளாதார வளர்ச்சியுள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும்…

Read More

யோகா நிகழ்ச்சியில் புகுந்து தாக்குதல்; மாலத்தீவில் அத்துமீறல்

யோகா நிகழ்ச்சியில் புகுந்து தாக்குதல்; மாலத்தீவில் அத்துமீறல்

மாலத்தீவில் இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலவரக்காரர்கள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமுற்றனர். மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம், மற்றும் மாலத்தீவு இளைஞர் நலத்துறை ஆகியன இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். இன்று காலை 6 மணிக்கு அங்குள்ள கலோலு விளையாட்டு அரங்கில் யோகா நிகழ்வு நடந்துகொண்டிருந்தபோது மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து அங்கு யோகாவில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்தினர். இதில் பலரும் காயமுற்றனர். குறைந்த எண்ணிக்கையில் 10 போலீசார் மட்டுமே இருந்ததால் கலவரத்தை உடனடியாக தடுக்க முடியவில்லை. பின்னர் ராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய தூதரக…

Read More

இலங்கையில் 21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் 21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைப்பது தொடர்பான 21-வதுசட்ட திருத்தத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இலங்கையில் கடும் அன்னியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இதற்கு காரணம் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே என குற்றம் சாட்டும் பொதுமக்கள், அவர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கையில் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்ற போது, அதிபருக்கு அனைத்து அதிகாரங்களை வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மக்கள் போராட்டம்…

Read More

அக்னிபாத் சிறந்த திட்டம் :நமது வீரர் சொல்வதை கேளுங்கள்

அக்னிபாத் சிறந்த திட்டம் :நமது வீரர் சொல்வதை கேளுங்கள்

அக்னிபாத் திட்டம் ஒரு சிறந்த திட்டம் என ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நம் ராணுவத்தில், ‘அக்னி வீரர்’கள் என்ற புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிபத் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு, 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்குப் பின், 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவர். இத்திட்டத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டம் மிகச் சிறந்தது என ராணுவ வீரர்கள் தரப்பில் கருத்து நிலவுகிறது.. இது குறித்து ராணுவ வீரர் ஒருவர் கூறியது, அக்னிபாத் திட்டம் என்பது நாட்டை காக்கும் இளைஞர்களுக்கு…

Read More

ஓய்வு பெறும் ‘அக்னி வீரர்’களுக்கு துணை ராணுவ படையில் வாய்ப்பு

ஓய்வு பெறும் ‘அக்னி வீரர்’களுக்கு துணை ராணுவ படையில் வாய்ப்பு

புதுடில்லி-‘ராணுவத்தின் ‘அக்னிபத்’ திட்டத்தில் தேர்வாகும் ‘அக்னி வீரர்’களுக்கு நான்கு ஆண்டுக்குப் பின், மத்திய ஆயுத போலீஸ் படை, அசாம் துப்பாக்கி படை ஆகிய துணை ராணுவ படைகளில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது இளைஞர்கள் ராணுவத்தில் சேர, அக்னிபத் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள், ‘அக்னி வீரர்’கள் என்று அழைக்கப்படுவர். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ௫௦ ஆயிரம் வீரர் கள் வரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள், ‘ஆபீசர்’ பதவிக்கு கீழ் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு, ஆறு மாத காலம் பயிற்சிஅளிக்கப்படும். பயிற்சிக்குப் பின், இவர்கள் ராணுவம்,…

Read More

தமிழக போலீஸ் பல் பிடுங்கப்பட்ட பாம்பு: அண்ணாமலை தாக்கு

தமிழக போலீஸ் பல் பிடுங்கப்பட்ட பாம்பு: அண்ணாமலை தாக்கு

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛தமிழக போலீஸ் ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளதாக’ விமர்சித்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அமைச்சர்களின் பேச்சுகள், கையை வெட்டிருவேன், காலை வெட்டிருவேன், சுலுக்கு எடுத்துருவேன், ரவுடி போன்ற பேச்சுகளை பேசுகின்றனர். அடுப்புக்கறி பாத்திரங்களை பார்த்து நீ கருப்பு என சொல்வது போல, அமைச்சர் செந்தில் பாலாஜி, பா.ஜ., தொண்டர்களை பார்த்து குண்டர்கள் எனக் கூறுகிறார். இதனை சிறந்த நகைச்சுவை படமாக மக்கள் பார்த்து ரசிப்பார்கள். அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம். ஆவினில் ஊழல் குறித்து நான் சொன்னதும்…

Read More
1 2