2.9 சதவீத மாணவியரிடம் புகையிலை பழக்கம்; அமைச்சர் ‘பகீர்’ தகவல்

2.9 சதவீத மாணவியரிடம் புகையிலை பழக்கம்; அமைச்சர் ‘பகீர்’ தகவல்

தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2.9 சதவீத மாணவியர், 6.6 சதவீத மாணவர்களும் புகையிலையை பயன்படுத்துகின்றனர்,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:இந்தியாவில், தினசரி 2,500 பேர் புகையிலை பாதிப்புகளால் உயிர் இழக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால், உலகம் முழுதும், ஆண்டுக்கு 20 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.பல்வேறு ஆய்வுகளின்படி, தமிழகத்தின் 31 சதவீதம் ஆண்கள்; 9.3 சதவீதம் பெண்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர். மேலும், 13 முதல் 15 வயது வரையிலான 6.6 சதவீத மாணவர்கள்; 2.9…

Read More

தமிழக பயணம் மறக்க முடியாதது: பிரதமர்

தமிழக பயணம் மறக்க முடியாதது: பிரதமர்

புதுடில்லி: தமிழகத்திற்கு நன்றி, நேற்றைய பயணம் மறக்க முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நேற்று(மே 26) சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐ.என்.எஸ்., அடையாறு கடற்படை தளத்தில் இருந்து விழா நடக்கும் இடத்திற்கு காரில் பிரதமர் வந்தார். வழிநெடுகிலும், பா.ஜ.,வினர் திரளாக திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியும் காரில் மெதுவாக சென்றபடி, பா.ஜ.,வினர் மற்றும் பொது மக்களை பார்த்து மகிழ்ச்சி பொங்க கைகளை அசைத்தார். சிவானந்தா சாலை அருகே மாணவியர் பரதநாட்டியம் ஆடி மோடியை வரவேற்றனர். அவர்களை பார்த்த உற்சாகத்தில் மோடி காரில் இருந்து வெளியே வந்து கை…

Read More

பயனர்களின் தகவல்கள் விற்பனை: டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.1,165 கோடி அபராதம்

பயனர்களின் தகவல்கள் விற்பனை: டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.1,165 கோடி அபராதம்

பயனர்களின் தகவல்களை பாதுகாக்காமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றதாக டுவிட்டர் நிறுவனம் மீதான வழக்கில், அந்நிறுவனத்திற்கு ரூ.1,165 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 230 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கும் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டர், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், லாகின் வசதி பாதுகாப்புக்காகவும் பயனர்களின் மொபைல் எண், இமெயில் முகவரியை சேமித்து வைக்கும் என துவக்கத்தில் அறிவித்திருந்தது. ஆனால் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை விளம்பர நிறுவனங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் டுவிட்டர் கைமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்த வழக்கை கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றம் விசாரித்தது. அப்போது டுவிட்டருக்கு எதிராக வாதாடிய பெடரல் டிரேட் கமிஷன், ‛டுவிட்டரை நம்பி வந்த பயனர்களின் தரவுகளை அவர்களுக்கு தெரியாமல் விளம்பர நிறுவனங்களுக்கு…

Read More

சுகாதார அமைப்பு தலைவராக டெட்ராஸ் மீண்டும் தேர்வு

சுகாதார அமைப்பு தலைவராக டெட்ராஸ் மீண்டும் தேர்வு

லண்டன், : உலக சுகாதார அமைப்பின் தலைவராக, டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ்,57, மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவராக, ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்த டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசிஸ், 2017ல் பதவியேற்றார். எத்தியோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், உலக சுகாதார அமைப்பின் தலைவராக பதவியேற்ற முதல் ஆப்ரிக்க நாட்டவர் என்ற பெருமையை பெற்றார். மேலும், டாக்டராக இல்லாத ஒருவர் இந்தப் பதவியை வகித்ததும் இதுவே முதல் முறையாகும். அவருடைய பதவிக் காலம் முடிய உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியானது. ஆனால், யாரும் போட்டியிடாததால், அவர் ஐந்து ஆண்டுகளுக்கு, இந்தப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Read More

கொரோனாவால் இறப்பு அதிகமா? மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு!

கொரோனாவால் இறப்பு அதிகமா? மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு!

இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களை, சில அமைப்புகள் பல மடங்கு அதிகரித்து காட்டுவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவில், 2020 ஜன., – 2021 டிச., வரை கொரோனாவால், 4.89 லட்சம் பேர் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இதை விட எட்டு மடங்கு அதிகமாக இறந்துள்ளதாக ‘லான்சட்’ எனப்படும் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனாவால், 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக அந்த இதழ் தெரிவித்துள்ளது. இதை மறுத்துள்ள மத்திய அரசு, 2020ம் ஆண்டின் பிறப்பு, இறப்பு விபரங்கள் அடங்கிய சிவில் பதிவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசின் ‘நிடி ஆயோக்’ உறுப்பினரும், கொரோனா தடுப்பு திட்டத்…

Read More