6 லட்சம் கிராமங்கள் இணைப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

6 லட்சம் கிராமங்கள் இணைப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

பெங்களூரு,-”நாட்டில் ஆறு லட்சம் கிராமங்களை ‘பிராட்பேண்ட்’ எனப்படும் அகன்ற அலைவரிசை வாயிலாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ மின்னணு உற்பத்தி, ‘செமிகண்டக்டர்’ எனப்படும், ‘சிப்’களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ‘செமிகான் இந்தியா’ மாநாட்டை நடத்த, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இந்நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூரில், செமிகான் இந்தியா முதல் மாநாடு நேற்று துவங்கியது. இதை ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில், ௧௩௦ கோடிக்கும் அதிகமான இந்தியர்களை…

Read More

ஜனாதிபதி அல்ல… பிரதமர் ஆவதே விருப்பம்: மாயாவதி

ஜனாதிபதி அல்ல… பிரதமர் ஆவதே விருப்பம்: மாயாவதி

லக்னோ: மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சி., மிஸ்ரா உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். இதனால் மாயாவதி ஜனாதிபதி ஆக உள்ளார் என சமாஜ்வாதி கட்சியினர் கூறினர். அவர்கள் புரளி கிளப்புவதாகவும், தான் பிரதமராக விரும்புவதாகவும் மாயாவதி கூறினார். உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு பா.ஜ.க., மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிரும் புதிருமாக இருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சி., மிஸ்ரா மற்றும் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ., உமா சங்கர் சிங் ஆகியோர் இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தனர். மாயாவதி ஒப்புதலுடன் இச்சந்திப்பு நடைபெற்றது. பகுஜன் சமாஜ்…

Read More

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேன்கனிக்கோட்டை தாலுகா பேட்டராய சாமி கோவில் தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை ஈடுகட்டும் வகையில் வருகிற 30-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் உள்ளூர் விடுமுறை நாள் அன்று ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆவடி கோவர்த்தனகிரி அன்பு நகர் முதல் தெருவை சேர்ந்தவர் உதயா (வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பூந்தமல்லி குமரன் நகரில் வசித்து வந்தவர் அனிதா (26). பி.ஏ. பட்டதாரி. இவர்கள் இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அனிதாவுக்கு அவரது பெற்றோர்கள் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனால் உதயா மற்றும் அனிதா கடந்த 6-ந் தேதி சென்னை ராயபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஆவடியில் உள்ள உதயாவின் வீட்டில் மேல்…

Read More

ஜூன் 30-ல் துவங்கிறது இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை

ஜூன் 30-ல் துவங்கிறது இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை

ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை, ஜூன் 30-ம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவு 11-ம் தேதி துவங்குகிறது. ஜம்மு — காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில், ஆண்டுதோறும், ஜூன் இறுதியில் இருந்து, ஆகஸ்ட் வரை, பனிலிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இந்த பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். 2021-ம் ஆண்டுக்கான யாத்திரை, ஜூன், 28ல் துவங்கி, ஆகஸ்ட், 22 வரை நடக்கும் எனவும், முன்பதிவு, ஏப்., 1-ம் தேதி துவங்கும் என, கோவில் வாரியம் அறிவித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு யாத்திரை…

Read More

காலையில் நீர்மட்டம் தாழ்வு, மாலையில் சீற்றம்; கன்னியாகுமரி கடலில் நிலவும் மாற்றம்…!

காலையில் நீர்மட்டம் தாழ்வு, மாலையில் சீற்றம்; கன்னியாகுமரி கடலில் நிலவும் மாற்றம்…!

சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை காண தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடலில் நீர்மட்டம் திடீரென தாழ்வாக செல்வதும், மாலையில் கடல் சீற்றமாகவும் இருந்து வருகிறது. இதனால் படகு போக்குவரத்து தொடர்ந்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காலையில் கடல்நீர் உள் வாங்கியது. எனவே காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நீண்டவரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 3 மணி…

Read More

உக்ரைன் உடனான போரை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி

உக்ரைன் உடனான போரை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி

உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன. இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷியாவும் முயற்சித்து வருகின்றன. பல்வேறு நாடுகளில் தூதர்கள், வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்தியாவுக்கு…

Read More