கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்

கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்

ஏற்கெனவே, உலகின் பல பகுதிகளில் பொது வாழ்க்கைக்கு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாக உள்ளது. ஒரு பிரெஞ்சு மருத்துவராகவோ, நியூசிலாந்து ஆசிரியராகவோ அல்லது கனடாவின் அரசு ஊழியராகவோ இருந்தால், பணிக்குச் செல்ல கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசியை மறுக்கும் மக்களுக்கு இந்தோனீசியா, அரசு பலன்களை மறுக்கலாம். க்ரீஸ் நாடு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியைக் கட்டாயமாக்குகிறது. பிப்ரவரி மாதத்திற்குள் அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரியா தயாராக உள்ளது. ஆஸ்திரியர்களுக்கு தடுப்பூசி வலுக்கட்டாயமாகப் போடப்படும் என்று இதற்கு அர்த்தமில்லை. மருத்துவ மற்றும் மத விதிவிலக்குகள் இருக்கும். இருப்பினும், தடுப்பூசி போடாத பெரும்பகுதி மக்கள், அதை செலுத்திக் கொள்ளாமல் இருப்பதால் அபராதத்தை எதிர்கொள்கிறார்கள்….

Read More

புயல் எதிரொலி; மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடி உத்தரவு

புயல் எதிரொலி; மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடி உத்தரவு

நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது.  இதனால், மழை, வெள்ளம் என மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.  இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாக வலுப்பெற்று மத்திய வங்க கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு ‘ஜாவத்’ என்று பெயர் சூட்டப்பட உள்ளது.  இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும்.  புயலுக்கான பட்டியலில் இந்த பெயர் தான் இடம் பெற்றுள்ளது. ‘ஜாவத்’ என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். …

Read More

குருத்வாராவில் மரபு மீறல்; மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் அழகி

குருத்வாராவில் மரபு மீறல்; மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் அழகி

பாகிஸ்தானின் கர்தார்பூர் சாகிப் குருத்வாராவில் மரபுகளை மீறி புகைப்படம் எடுத்து அவமதித்ததாக குற்றச்சாட்டிற்கு உள்ளான மாடல் அழகி சவுலேஹா, தன் நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சீக்கிய புனித தலமான கர்தார்பூர் சாகிப் குருத்வாரா உள்ளது. நம் நாட்டில் இருந்து ஆண்டு தோறும் ஏராளமான சீக்கியர்கள் இங்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் பாக்., மாடல் அழகி சவுலேஹா, உடைகளை விளம்பரம் செய்ய குருத்வாரா முன் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும், டில்லியின் சீக்கிய குருத்வாரா நிர்வாகக்குழு தலைவருமான மன்ஜிந்தர் சிங் சிர்சா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைஅடுத்து…

Read More
1 2 3