கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களுக்கு விரைவில் விலக்கு
பெங்களூரு: கர்நாடகத்தில் கோவில்களுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும் என்றும், இதுதொடர்பான சட்டம் சட்டசபை கூட்டுக்கூட்டத்தில் கொண்டுவரப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். விரைவில் விலக்கு கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் உப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட மந்திரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:- பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. ஆனால் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. சில கட்டுப்பாடுகளால் தொந்தரவை அனுபவித்து வருகின்றன. அதனால் கர்நாடகத்தில் கோவில்களுக்கு…
Read More