எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி

எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அமைச்சரவை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று தெரிவித்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது, எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது என்றார். மேலும் அவர் கூறும் போது, “  எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வாண்டிற்காக மீதமுள்ள மாதங்களில் செலவழிக்க ஒரே தவணையாக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்படும். அடுத்த நிதியாண்டு முதல்…

Read More

தமிழகத்தில் நாளையும் 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளையும் 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற  இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும்  8 மாவட்டங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.  மேலும், வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், காஞ்சீபுரம், விழுப்புரம்,…

Read More