’நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமானவர்…எனது கட்சியில் இணையுங்கள்’ – பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு’நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமானவர்…எனது கட்சியில் இணையுங்கள்’ – பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.பருவநிலை மாற்ற உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த உச்சிமாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்திய பிரதமர் மோடியிடம் கைகுலுக்கி பேசிய இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட், ‘நீங்கள் (நரேந்திரமோடி) இஸ்ரேலில் மிகவும் பிரபலமான நபர்… வாருங்கள் எனது கட்சியில் இணைந்துகொள்ளுங்கள்’ என்று கூறினார். இதனால், அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது….

Read More

டெல்லியில் ஒரே மாதத்தில் 1,200 பேருக்கு டெங்கு பாதிப்பு

டெல்லியில் ஒரே மாதத்தில் 1,200 பேருக்கு டெங்கு பாதிப்பு

தலைநகர் டெல்லியை டெங்கு காய்ச்சல் மிரட்டிக் கொண்டிருக்கிறது. அங்கு இந்த ஆண்டு இதுவரை ஆயிரத்து 530 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆயிரத்து 200 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது 4 ஆண்டுகளில் அதிகபட்ச பாதிப்பு ஆகும். டெல்லியில் டெங்குவால் நேற்று முன்தினம் 5 பேர் இறந்திருக்கின்றனர். இதனால் இக்காய்ச்சலால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவும் 4 ஆண்டுகளில் அதிகம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More