கோவில் இடவாடகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி; அமைச்சர் அறிவிப்பு

கோவில் இடவாடகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி; அமைச்சர் அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தில், தமிழகத்தில் கோவில் இடத்திற்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் வசதியை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்பின், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கோவில் இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம்.  இணையவழி வாடகை மூலம், எவ்வளவு வாடகை பெறப்படுகிறது என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம். நேரடியாக வாடகை செலுத்துவோரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார். தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தது குறித்து பேசிய அவர், மற்ற நாட்களில் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தால் அதனை…

Read More

வட,தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வட,தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் (அக்.8,9) வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய…

Read More