தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்புபடை வீரர் விடுவிப்பு

தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்புபடை வீரர் விடுவிப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால், அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரும், ஆப்கன் மக்களும் வெளியேற முயற்சித்தனர். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தலீபான்கள் அனுமதி அளித்தனர். இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படை வீரரான பென் சால்டர் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்தார். அவர் காபூலில் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார். தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது தனது தொழில்நிறுவனத்தில் பணியாற்றிவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரை ஆப்கானிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பி செல்ல பென் சால்டர் உதவி செய்துள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தான் எல்லையில் அவர்கள் அனைவரையும் தலீபான்கள் தடுத்து நிறுத்தினர்….

Read More

லகிம்பூர் கேரி, சிதாபூர் பகுதிகளில் இணைய தள சேவை முடக்கம்

லகிம்பூர் கேரி, சிதாபூர் பகுதிகளில் இணைய தள சேவை முடக்கம்

உத்தர பிரதேசத்தில் உள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி, சிதாபூரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், லகிம்பூர் கேரி மற்றும் சிதாபூர் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இணைய சேவை முடக்கம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, இன்று லகிம்பூர் கேரி மாவட்டம் வர திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி, சிதாபூர்…

Read More