பட்டாசு வழக்கு; சரவெடிக்கு தடை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பட்டாசு வழக்கு; சரவெடிக்கு தடை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரியும், பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த மனுக்கள் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, பசுமை பட்டாசு தயாரிப்பில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபரின் மகிழ்ச்சிக்காக பிறரின் உடல்…

Read More

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் – மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் – மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர். தற்போது ரஜினிகாந்த் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள சாதாரண அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்திற்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்….

Read More

இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும் – மு.க.ஸ்டாலின்

இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும் – மு.க.ஸ்டாலின்

பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இல்லம் தேடி கல்வி திட்டத்தை நேற்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. இந்நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக, முதல்- அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும். இந்த திட்டத்திற்கான தன்னார்வலர்களை தேர்வு செய்யும் முறையும்,…

Read More

“அனைத்து நாடுகளின் உரிமைகளையும் மதிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” – ராஜ்நாத் சிங்

“அனைத்து நாடுகளின் உரிமைகளையும் மதிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” – ராஜ்நாத் சிங்

இந்தோ-பசிபிக் பிராந்திய மாநாடு இன்று தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரை காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “இந்தோ-பசிபிக் பிராந்தியம் பன்முகத்தன்மை வாய்ந்ததாக பல கலாச்சாரங்கள், இனங்கள், பொருளாதார மாதிரிகள், நிர்வாக அமைப்புகள் கொண்டவையாக விளங்கினாலும், பெருங்கடல்கள் ஒரு பொதுவான இணைப்பாகவே இருக்கின்றன. கடல்சார் பிரச்சினைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் பொதுவான நோக்கங்களை கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியம், பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இவற்றை சமாளிக்க ஒற்றுமை தேவை. தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா உறுதி கொண்டுள்ளது. அதே சமயம்…

Read More

முல்லை பெரியாறு விவகாரம்: முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

முல்லை பெரியாறு விவகாரம்: முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

“முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் ” என உறுதியளித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக அரசும், தமிழக மக்களும் கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர். இந்தக் கடினமான காலகட்டத்தில் நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம். மக்களின் துயர் துடைக்கத் தேவையான உதவிகளைச் செய்வோம். அந்த வகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்கு தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். வெள்ள நிவாரணப்…

Read More

அனைத்துத்துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் விவாதப்பொருளாக மாறி இருப்பது சரியல்ல – தலைமை செயலாளர்

அனைத்துத்துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் விவாதப்பொருளாக மாறி இருப்பது சரியல்ல – தலைமை செயலாளர்

அனைத்துத்துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் விவாதப்பொருளாக மாறி இருப்பது சரியல்ல என தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இறையன்பு மேலும் கூறியிருப்பதாவது;- திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து தகவல்களை திரட்ட அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமான நடைமுறைதான். அனைத்துத்துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்புவது வழக்கமான நடைமுறையே. புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கவே தரவுகள் திரட்டப்படுகிறது. அலுவல் ரீதியாக அனுப்பப்பட்ட கடிதத்தை அரசியல் சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Read More

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டம்; தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டம்; தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது.  துபாயில் இன்று நடைபெறும் குரூப்-1 பிரிவு லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான துவக்கம் பெற்றது. துவக்க ஜோடி 73 ரன்கள் சேர்த்தது. எனினும், அடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் அதிரடியாக ஆட சிரமப்பட்டனர். வெஸ்ட் இண்டீஸ்  அணி நிர்ணயிக்கப்பட்ட…

Read More

உ.பி.யில் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை இலவசம் – காங்கிரஸ்

உ.பி.யில் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை இலவசம் – காங்கிரஸ்

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு கட்சிகள் மக்களை கவரும் நோக்கில் வாக்குறுதிகளை அறிவிக்கத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ சேவை இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக…

Read More

ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுகின்றன. அடுத்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடும். ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான டெண்டர் நடைமுறையை கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. டெண்டர் விண்ணப்ப கட்டணமாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் 22 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை வாங்கி இருந்தன. அணியின் அடிப்படை விலையாக ரூ.2 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அகமதாபாத், லக்னோ புதிய அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.  லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்ட…

Read More

அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

 அரசால் தீட்டப்படும் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அரசின் நலத் திட்ட உதவிகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதிலும், இயற்கை பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பொதுச் சேவையை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இதேபோன்று, நம் நாட்டு மக்கள் அனைவரும் கண்ணுடையவர்களாக விளங்கினால் தான் நம் நாடு முன்னேற்றம் அடையும் என்பதன் அடிப்படையில், அழியாச் செல்வமாம் கல்விச் செல்வத்தை மாணவ, மாணவியருக்கு போதித்து, அவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் ஆக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட இன்றியமையயப் பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்ததால்…

Read More
1 2 3 4