நைஜீரியாவில் மர்ம நபர்கள் தாக்குதல்: 34 கிராமவாசிகள் பலி

நைஜீரியாவில் மர்ம நபர்கள் தாக்குதல்: 34 கிராமவாசிகள் பலி

நைஜீரியாவின் வடமேற்கே கடுனா பகுதியில் கவுரா நகரில் மடமய் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் 34 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  7 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த தாக்குதலின்போது, சில வீடுகளுக்கும் அந்த கும்பல் தீ வைத்து எரித்து உள்ளது.  இதுபற்றி அறிந்த அரசு படை சம்பவ பகுதிக்கு சென்று பதில் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதன்பின்னர் எரிந்து கொண்டிருந்த 3 வீடுகளின் தீயை அணைத்தனர்.  6 பேரையும் மீட்டனர்.  இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்தும்படி அரசு உத்தரவிட்டது. 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக…

Read More

உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு பாதிப்புகள் 156 ஆக உயர்வு

உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு பாதிப்புகள் 156 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவலாக குறைந்து வரும் சூழலில் வடமாநிலங்களில் டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.  மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டெங்குவால் பரவலாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவற்றில், உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் 28 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இதனால், மொத்த பாதிப்பு 156 ஆக உயர்வடைந்து உள்ளது. இதுபற்றி தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் கூறும்போது, இதுவரை 70 நோயாளிகள் மருத்துவமனையிலும், 86 பேர் வீட்டு தனிமையிலும் இருந்து சிகிச்சை பெறுகின்றனர்.  ஒவ்வொரு சமூக நல மையத்திலும் டெங்கு பாதிப்புகளுக்காக 10 படுக்கைகளை தயார் செய்து வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

Read More