நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்

சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களைப் பற்றிய அவதூறான வகையில் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீராமிதுனை கடந்த ஆகஸ்ட் 14 தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது.

Read More

கொரோனா:விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணியில் தொய்வு; மயில்சாமி அண்ணாதுரை

கொரோனா:விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணியில் தொய்வு; மயில்சாமி அண்ணாதுரை

இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது;- கொரோனாவால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறைவேற 3 ஆண்டுகள் ஆகும்;  3வது நிலவு பயணமும் தள்ளி போகிறது. விமான பயணம் போல விண்வெளி செல்வதற்கு வாகனங்கள் உருவாகும். செவ்வாய் கிரகத்தில் தாவரம் வளர்ப்பதற்கான மூலக்கூறுகள் ஆராயப்படும். சந்திரயான்3 செயற்கைகோள் 1 ஆண்டுக்குள் அனுப்பப்படும்.ஆளில்லா விண்கலம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும். நிலத்திலும், நீரிலும் வரும் எல்லை பிரச்சினைகள் வானிலும் வரக் கூடாது என விஞ்ஞானிகள் செயலாற்றி வருகின்றார். வானில் உள்ள செயற்கைகோள் கழிவுகளை அகற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன என கூறினார்.

Read More