ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து – நிர்மலா சீதாராமன்

நாட்டில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017- ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.  ஜி.எஸ்.டி. நடைமுறை அமலுக்கு வந்தது முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதிமந்திரி தலைமையில் நடைபெற்று வருகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: -பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து…

Read More

இந்திய மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ .2,427 கோடியை விடுவித்துள்ளது

இந்திய மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ .2,427 கோடியை விடுவித்துள்ளது

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியினை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத்துறை விடுவித்துள்ளது. இதன்படி 11 மாநில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக ரூ.2,427 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கான பங்காக ரூ.2,67.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்படும் முதல் தொகை ஆகும். இந்த நிதியானது குடிநீர், சுகாதாரம், மழைநீர் சேமிப்பு, நீர் மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்காக செலவிடப்பட உள்ளது. அத்துடன் தொகை வரப்பெற்ற 10 நாட்களுக்குள்ளாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த தொகையை மாற்ற வேண்டும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு…

Read More