கஞ்சா கும்பல் சிறையில் அடைப்பு

கஞ்சா கும்பல் சிறையில் அடைப்பு

புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் குருசுக்குப்பம் பகுதியில் ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அங்கு 3 பெண்களும், 4 ஆண்களும் இருந்தனர். விசாரணையில் அவர்கள், ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த உக்விஷாகா (வயது 32), முகேயோ ஆலிவர் (30), ஆக்சல், நபுகீர ஹெலன் (25), நன்டன்கோ மேரி (27), இனிமகஸ்வி மொரிட்டி (25) மற்றும் குருசுக்குப்பத்தை சேர்ந்த விவேக் (30) என்பதும், சட்டவிரோதமாக தங்கியிருந்து, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அந்த வீட்டில் இருந்து 3 கிலோ கஞ்சா, ரூ.51,120 ரொக்கப்பணம் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்படட 7 பேர்…

Read More

தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி இழப்பு – தணிக்கை துறை அறிக்கையில் தகவல்

தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி இழப்பு – தணிக்கை துறை அறிக்கையில் தகவல்

2018-19 ஆம் ஆண்டுக்கான வருவாய் மற்றும் பொருளாதாரப் பிரிவிற்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறையின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் 2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் 1 லட்சத்து 72 ஆயிரத்து 741 கோடி ரூபாயாக இருந்தது என்றும் அதில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 549 கோடி ரூபாய் வரி மூலம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைத்த மொத்த வருவாயில் தமிழக அரசால் ஈட்டப்பட்ட வருவாய் 69 சதவீதமாக இருந்தது என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி., வணிக வரி, பதிவுக் கட்டணம் உள்ளிட்டவைகள் மீதான வரிகள் குறித்து தணிக்கை செய்யப்பட்டதில் தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி…

Read More