மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்-மந்திரி பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்.எல்.ஏ.வும்,வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி…

Read More

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.15 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 94.17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36-க்கு விற்பனை செய்யப்படுகிறது….

Read More

88 கோடியை கடந்தது தடுப்பூசி ‘டோஸ்’

88 கோடியை கடந்தது தடுப்பூசி ‘டோஸ்’

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை நேற்று இரவு நிலவரப்படி, 88 கோடி ‘டோஸ்’ கடந்தது’ என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை நேற்று இரவு 7:00 மணி வரை, நாடு முழுதும் 59 லட்சத்து 48 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நள்ளிரவுக்கு பிறகு மேலும் உயரும்.நாடு முழுதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ், 88 கோடியை கடந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

நைஜீரியாவில் மர்ம நபர்கள் தாக்குதல்: 34 கிராமவாசிகள் பலி

நைஜீரியாவில் மர்ம நபர்கள் தாக்குதல்: 34 கிராமவாசிகள் பலி

நைஜீரியாவின் வடமேற்கே கடுனா பகுதியில் கவுரா நகரில் மடமய் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் 34 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  7 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த தாக்குதலின்போது, சில வீடுகளுக்கும் அந்த கும்பல் தீ வைத்து எரித்து உள்ளது.  இதுபற்றி அறிந்த அரசு படை சம்பவ பகுதிக்கு சென்று பதில் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதன்பின்னர் எரிந்து கொண்டிருந்த 3 வீடுகளின் தீயை அணைத்தனர்.  6 பேரையும் மீட்டனர்.  இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்தும்படி அரசு உத்தரவிட்டது. 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக…

Read More

உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு பாதிப்புகள் 156 ஆக உயர்வு

உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு பாதிப்புகள் 156 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவலாக குறைந்து வரும் சூழலில் வடமாநிலங்களில் டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.  மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டெங்குவால் பரவலாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவற்றில், உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் 28 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இதனால், மொத்த பாதிப்பு 156 ஆக உயர்வடைந்து உள்ளது. இதுபற்றி தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் கூறும்போது, இதுவரை 70 நோயாளிகள் மருத்துவமனையிலும், 86 பேர் வீட்டு தனிமையிலும் இருந்து சிகிச்சை பெறுகின்றனர்.  ஒவ்வொரு சமூக நல மையத்திலும் டெங்கு பாதிப்புகளுக்காக 10 படுக்கைகளை தயார் செய்து வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

Read More

ஒடிசாவில் ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி; இலக்கை தாக்கி அழித்தது

ஒடிசாவில் ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி; இலக்கை தாக்கி அழித்தது

ஆகாஷ் ப்ரைம் என்ற ஏவுகணையை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) வடிவமைத்துள்ளது.  ஒடிசாவின் சந்திப்பூரில் இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஆளில்லா விமானங்களை தரையிலிருந்து இலக்காக கொண்டு, தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்து, தாக்கி அழித்துள்ளது.  இதனால், டி.ஆர்.டி.ஓ. அமைப்பிற்கு மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Read More

சஞ்சு சாம்சன் அதிரடி: ஐதராபாத்துக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு

சஞ்சு சாம்சன் அதிரடி: ஐதராபாத்துக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு

இன்று நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 40-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். எவின் லிவிஸ் 6 ரன்களில் அவுட் ஆன நிலையில், பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து சந்தீப் சர்மா பந்தில் போல்டு ஆனார். கேப்டன் சஞ்சு சாம்சன்…

Read More

சென்னை – பெங்களூரு இடையேயான போட்டி: புழுதிப்புயல் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம்

சென்னை – பெங்களூரு இடையேயான போட்டி: புழுதிப்புயல் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டாஸ் மாலை 7 மணிக்கு சுண்டப்படுவதாக இருந்தது. ஆனால், சார்ஜாவில் போட்டி நடைபெறும் மைதானத்தில் புழுதிப்புயல் வீசி வருகிறது. இதனால், இன்றைய போட்டியில் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Read More

தமிழ்நாட்டில் இன்று 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 53 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 17 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,631 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 1 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35…

Read More

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்

சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களைப் பற்றிய அவதூறான வகையில் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீராமிதுனை கடந்த ஆகஸ்ட் 14 தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது.

Read More
1 2 3 4