மல்யுத்தத்தில் இந்தியா அசத்தல்; ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

மல்யுத்தத்தில் இந்தியா அசத்தல்; ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 12வது நாளான இன்று (ஆக.,04) மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா, கொலம்பியா வீரரை எதிர்கொண்டார். இதில், 13-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் பல்கேரியா வீரருடன் மோதியதில் 14-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். மல்யுத்தத்தில் 86 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரர் தீபக் புனியா, நைஜீரிய வீரரை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி…

Read More

நாடாளுமன்றத்தில் அமளி: மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் இடைநீக்கம்

நாடாளுமன்றத்தில் அமளி: மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் இடைநீக்கம்

பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள் பயன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் வேளையில், மாநிலங்களவையில் விதிகளை மீறி அவையின் மையப்பகுதிக்கு வந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி 6 உறுப்பினர்களை இன்று நாள் முழுவதுமாக இடைநீக்கம் செய்திருக்கிறார் மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு. டோலா சென், நடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், ஷாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மெளசம் நூர் ஆகிய இந்த ஆறு உறுப்பினர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

Read More