டுவிட்டர், பேஸ்புக் மற்றும் கூகல் நிறுவனங்களின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் !!

டுவிட்டர், பேஸ்புக் மற்றும் கூகல் நிறுவனங்களின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் !!

கூகுள், டுவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்கள் மீது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வழக்கு தொடுத்துள்ளார். அவர் இந்த நிறுவனங்களின் தணிக்கைக்கு பலியாகி விட்டதாக கூறி உள்ளார். இந்த வழக்கில் அந்த 3 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி உள்ளார். இந்த வழக்கு, பேச்சுரிமைக்கு மிக அழகான முன்னேற்றமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரபரப்பாக இயங்கிய டிரம்ப், வன்முறையை விளைவிக்கக்கூடிய கருத்துகள் மற்றும் பொய்யான தகவல்களை அடிக்கடி பரப்பியதாகக் கூறிய குற்றச்சாட்டுகளால் அங்கு அவரது செயல்பாடுகள் முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலையை தமிழக பா.ஜ. தலைவராக தேசிய தலைவர் நட்டா அறிவித்தார் !!

முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலையை தமிழக பா.ஜ. தலைவராக தேசிய தலைவர் நட்டா அறிவித்தார் !!

முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலையை தமிழக பா.ஜ. தலைவராக தேசிய தலைவர் நட்டா அறிவித்தார் !! தமிழக பா.ஜ., தலைவராக உள்ள முருகன், மத்திய இணைஅமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், புதிய தலைவராக அண்ணாமலை இன்று நியமிக்கப்பட்டார். தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, 2019 இறுதியில், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். பின், புதிய தலைவராக எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் என, பலரது பெயர்கள் கூறப்பட்டன. எதிர்பாராத வகையில், தேசிய எஸ்.சி., – எஸ்.டி., ஆணைய துணை தலைவராக இருந்த முருகன், தமிழக பா.ஜ., தலைவராக, 2020 மார்ச்சில் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் முருகன் மத்திய இணை அமைச்சராக நேற்று, பொறுப்பேற்றார். தமிழக பா.ஜ.,வுக்கு யாரை புதிய…

Read More

ஹைத்தி அதிபர் பாதுகாவலர்களால் படுகொலை

ஹைத்தி அதிபர் பாதுகாவலர்களால் படுகொலை

ஹைத்தி அதிபர் ஜோவெனெல் மயிஸ், அவரது இல்லத்தில் பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள அந்நாட்டு இடைக்கால பிரதமர் ஜோசப், தாக்குதல் மனிதநேயமற்றது. வெறுப்பை தரக்கூடியது. நாட்டின் பாதுகாப்பு கட்டுக்குள் உள்ளது. போலீசார் மற்றும் ஆயுதப்படையினர் கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளது. முக்கிய இடங்களுக்கு, பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்து உள்ளார். அதிபர் படுகொலையை தொடர்ந்து, தன்னை தானே அதிபராகவும் ஜோசப் அறிவித்துள்ளார். அதிபர் படுகொலையை தொடர்ந்து, தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகர சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் வீடுகளுக்குள் உள்ளனர். ஒரு…

Read More

இந்திய மந்திரி சபையில் மோடியின் அதிரடி மாற்றம் – இளமையும் அனுபவமும் !!

இந்திய மந்திரி சபையில் மோடியின் அதிரடி மாற்றம் – இளமையும் அனுபவமும் !!

பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்றுக்கொண்டவர்களில் பலர் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில், மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அதில், 36 பேர்…

Read More

உன்னால நான் கேட்டேன் !! என்னால நீ கேட்ட !! தமிழக பா.ஜவும் … அதிமுகவும் !!

உன்னால நான் கேட்டேன் !! என்னால நீ கேட்ட !!  தமிழக பா.ஜவும் … அதிமுகவும் !!

நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் உங்களால் தான் தோற்றோம் என கூட்டணியில் உள்ள அதிமுக, பா.ஜ., மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறது. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ‘அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை.நாம் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியை சந்தித்தோம்’ என கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ.,வின் கே.டி.ராகவன், ‘அதிமுக.,வால் தான் பா.ஜ., தோல்வி அடைந்ததாக’ குறிப்பிட்டிருந்தார். சட்டசபை தேர்தல் தோல்விக்கு கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர்…

Read More

மியாமி நகரில் 12 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில் 24 பேர் பலி !!

மியாமி நகரில் 12 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில் 24 பேர் பலி !!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் ஜூன் 24 அன்று 12 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில், 24 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி, காணமல் போன 121 பேர் பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. 1980இல் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள கார் நிறுத்தகத்தின் சுவர்களில் நீர் கசிவு ஏற்பட்டு பலவீனமானதாலும், ஆ.சி.சி கான்க்ரீட் தளங்களில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, பலமிலந்ததாலும், இந்த கட்டிடம் இடிந்து நெறுங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. காணாமல் போன 121 பேரை கண்டுபிடிக்கும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு, பாதி இடிந்த நிலையில்…

Read More

நக்சலைட் தீவிரகவாதியாக கருதப்பட்ட ஸ்டேன் சுவாமி மறைந்தார் !!

நக்சலைட்  தீவிரகவாதியாக கருதப்பட்ட ஸ்டேன் சுவாமி மறைந்தார் !!

பீமா கோரேகான் கலவர வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்த சமூக ஆர்வலரும், நக்சலைட் தீவிரகவாதியாக கருதப்பட்ட பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 2017-ம் ஆண்டு டிசம்பரில் மஹாராஷ்டிராவின் புனே அருகே பீமா கோரேகான் என்ற பகுதியில், இருதரப்பினருக்கு மோதல் கலவரமாக வெடித்து. இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கலவரத்தை தூண்டியதாக மனித உரிமைகள் ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமியை,84 என்பவரை, ஜார்க்கண்டின் ராஞ்சியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்தாண்டு அக்டோபரில் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு மும்பை தலோஜா சிறையில்…

Read More

உத்தரகாசியில் சுயம்பு லிங்கமாக சிவனும் – திரிசூலமாக அருள் தரும் சக்தியும் !!

உத்தரகாசியில் சுயம்பு லிங்கமாக சிவனும் – திரிசூலமாக அருள் தரும் சக்தியும் !!

உத்தரகாசியில் சுயம்பு லிங்கமாக சிவனும் – திரிசூலமாக அருள் தரும் சக்தியும் !! ஹிமாலய பர்வதம் சூழ்ந்திருக்க அழகும்… பக்தியும் கொஞ்சி விளையாடும் வரலாற்று புகழ் பெற்ற ஈஸ்வரனின் கோவிலை கண்டு பக்தி பரவசமடையுங்கள் …. அனைவரோடும் பகிருங்கள் !! இமய மலையிலிருந்து சிவ -சக்தி தரிசனம் 👉 👈 தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஓம் நம…

Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை; ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை தகவல்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை; ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை தகவல்

இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கோரி 30 ஆண்டு காலம் நடைபெற்றுவந்த உள்நாட்டு யுத்தம், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட போருடன் முடிவுக்கு வந்தது. ஆனாலும் இறுதிகட்ட போரில் ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை தொடர்பாக சர்வதேச நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து இலங்கை சந்தித்துவருகிறது. குறிப்பாக 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் அடிப்படையில், அந்நாட்டுக்கான ஏற்றுமதி சலுகை ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அளித்துள்ள ‘ஜி.எஸ்.பி. பிளஸ்’ வர்த்தகச் சலுகையால், ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையால் வரியின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. கடந்த 2010-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட இச்சலுகை, 2017-ல் மீண்டும்…

Read More

தமிழகத்தில் சாராயக்கடைகள் இரவு 8 மணிவரை திறந்திருக்கப்படும் – தி மு க அரசு !!

தமிழகத்தில் சாராயக்கடைகள் இரவு 8 மணிவரை திறந்திருக்கப்படும் – தி மு க அரசு !!

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேநீர் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

Read More
1 2 3 4