இந்திய ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க குழு

இந்திய ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க குழு

இந்திய ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமாக நன்செய், புண்செய் நிலங்கள் மட்டுமின்றி வர்த்தக கட்டடங்கள், வீடுகள், மனையிடங்கள் உள்ளன. வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வரும் குத்தகைதாரர்கள், நியாயமான வாடகை செலுத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர். பலர் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக, மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில்வேலவன், உதவி கமிஷனர்கள் தலைமையில் மூன்று குழுக்கள் உருவாக்கியுள்ளார். இத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆக்கிரமிப்பாளர்கள் பலரும் இதுவரை அதிகாரிகளை சரிக்கட்டியும், அரசியல்வாதிகளை பயன்படுத்தி சமாளித்து வந்தனர். ஆக்கிரமிப்பு…

Read More

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குக் காரணமான 3 விஷயங்கள்’ சீண்டும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குக் காரணமான 3 விஷயங்கள்’  சீண்டும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்ததற்கு கட்சிக்காரர்கள் யாரும் வருத்தப்படவில்லை’ என அக்கட்சியின் மூத்த நிர்வாகி பேசியுள்ளது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அடைந்த தோல்விக்குப் பிறகு அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் 7ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடந்த அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துகள், பா.ஜ.கவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் பேசிய சி.வி.சண்முகம், “பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக இழந்தோம். கடந்த 10 ஆண்டுகளாக நல்ல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சென்ற காரணத்தால் நமக்கு நல்ல…

Read More