இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை – சவுதி அரேபியா

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை – சவுதி அரேபியா

கொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகள் தங்களுடைய சர்வதேச விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன. சரக்கு விமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான விமான போக்குவரத்து தவிர பயணிகள் விமானங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் கடுமையாக்கியும் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம், கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வருவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபிய அரசு கொரோனா பாதிப்புகள் அதிகளவிலுள்ள நாடுகளை ரெட் லிஸ்ட் எனப்படும் பட்டியலில் வகைப்படுத்தி உள்ளது. அவற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பிரேசில், அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன….

Read More

தமிழகத்தில் போலி சமூக நீதி !!

தமிழகத்தில் போலி சமூக நீதி !!

தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுவதாக கூறியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை பா.ஜ., முன்னேற்றி இருப்பதாகவும், திமுக.,வில் இதுபோல் இல்லாமல் சிலரை வளர விடுவதில்லை எனவும் கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அப்துல்கலாம் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்; விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர். அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆவதை திமுக தடுத்துவிட்டது. அ.தி.மு.க – பா.ஜ., கூட்டணியில் இருக்கிறது. அதனால் பிரதமருடன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்,…

Read More